இதுதான் விலை குறைப்பு.. ரூபாய் 13.60 லட்சம் கம்மி பண்ணிய BMW - எந்தெந்த காருக்கு?
BMW Car Price Reduce: ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக ஆடம்பர காரான பிஎம்டபுள்யூ காரின் விலை ரூபாய் 13.60 லட்சம் வரை குறைந்துள்ளது.

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைப்பதாக அறிவித்த பிறகு நாட்டில் பல பொருட்களின் விலை குறைந்தது. குறிப்பாக, கார்களின் விலை பன்மடங்கு குறைந்துள்ளது. 28 சதவீதம் வரியின் கீழ் இருந்த கார்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி, செஸ் வரியுடன் சேர்த்து இருந்த வரியை குறைத்து 40 சதவீதமாக குறைத்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
இதன் எதிரொலியாக ஆடம்பர காரான பிஎம்பி டபுள்யூ காரின் விலையும் குறைந்துள்ளது. பிஎம்டபுள்யூ காரின் எந்த வேரியண்ட் எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது? என்பதை கீழே காணலாம்.
1. BMW 2 Series Gran Coupe - ரூ.1.70 லட்சம் (விலை குறைக்கப்பட்டுள்ளது)
2. BMW 3 Series LWB - ரூ.3.45 லட்சம் ( வி.கு)
3. BMW 5 Series LWB - ரூ.4.15 லட்சம் ( வி.கு)
4. BMW 7 Series LWB - ரூ.10.25 லட்சம் ( வி.கு)
5. BMW X1 - ரூ.3.75 லட்சம் ( வி.கு)
6. BMW X3 - ரூ.5.20 லட்சம் ( வி.கு)
7. BMW X5 - ரூ. 7.65 லட்சம் ( வி.கு)
8. BMW X7 - ரூ.9.25 லட்சம் ( வி.கு)
9. BMW M340i - ரூ.4.25 லட்சம் ( வி.கு)
10. BMW Z4 - ரூ. 5 லட்சம் ( வி.கு)
11. BMW M2 - ரூ.5.75 லட்சம் ( வி.கு)
12. BMW M4 - ரூ.10.20 லட்சம் ( வி.கு)
13. BMW M5 - ரூ.4.30 லட்சம் ( வி.கு)
14. BMW M8 - ரூ.13.60 லட்சம் (வி.கு)
15. BMW XM - ரூ.5.45 லட்சம் ( வி.கு)
16. MINI Cooper S - ரூ.3.10 லட்சம் (வி.கு)
1. BMW 2 Series Gran Coupe:
பிஎம்டபுள்யூ காரின் BMW 2 Series Gran Coupe காரின் 218i M Sport Pro வேரியண்ட் விலை ரூபாய் 1.70 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இனிமேல் இந்த கார் ரூபாய் 47.20 லட்சத்திற்கு விற்கப்பட உள்ளது.
2. BMW 3 Series LWB:
இந்த BMW 3 Series LWB காரின் 330Li M Sport 50 Jahre காரின் விலை ரூபாய் 3.45 லட்சம் வரை குறைக்கப்படுகிறது. இதனால், இதன் புதிய விலை ரூபாய் 60.55 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது.
3. BMW 5 Series LWB:
இந்த BMW 5 Series LWB காரின் 530Li M Sport மாடல் ரூபாய் 4.15 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபாய் 72.35 லட்சம் ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 4.15 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
4. BMW 7 Series LWB:
BMW 7 Series LWB காரின் 740i M Sport காரின் விலையில் ரூபாய் 10.25 லட்சம் வரை ஜிஎஸ்டி மாற்றத்தால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த கார் இதன் புதிய விலையான ரூபாய் 1 கோடியே 79 லட்சத்து 45 ஆயிரம் ஆகும்.
5. BMW X1:
இந்த BMW X1 காரின் X1 sDrive18d M Sport வேரியண்ட் ரூபாய் 3.75 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை இனிமேல் ரூபாய் 52 லட்சத்து 15 ஆயிரம் ஆகும்.
6. BMW X3:
BMW X3 காரின் X3 xDrive20d M Sport வேரியண்ட் ரூபாய் 5.20 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 73 லட்சத்து 10 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.
7. BMW X5:
இந்த BMW X5 காரின் X5 xDrive30d M Sport Pro வேரியண்ட் ரூபாய் 7 லட்சத்து 65 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் புதிய விலை ரூபாய் 1 கோடியே 7 லட்சத்து 35 ஆயிரம் ஆகும்.
8. BMW X7:
இந்த BMW X7 காரின் X7 xDrive40d M Sport வேரியண்ட் விலையில் ரூபாய் 9.25 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபாய் 1 கோடியே 29 லட்சத்து 15 ஆயிரம் ஆகும்.
9. BMW M340i:
இந்த BMW M340i காரின் M340i xDrive வேரியண்ட் ரூபாய் 4.25 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இனிமேல் இந்த கார் ரூபாய் 73 லட்சத்து 95 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.
10. BMW Z4:
இந்த BMW Z4 காரின் Z4 M40i வேரியண்ட் ரூபாய் 5 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் புதிய விலை ரூபாய் 87 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.
11. BMW M2:
இந்த BMW M2 காரின் M2 ேவரியண்ட்டின் விலை ரூபாய் 5 லட்சத்து 75 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய விலை ரூபாய் 1 கோடியே 25 ஆயிரம் ஆகும்.
12. BMW M4:
இந்த BMW M4 காரின் M4 CS காரின் விலை ரூபாய் 10 லட்சத்து 20 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இனிமேல் இந்த கார் ரூபாய் 1 கோடியே 78 லட்சத்து 80 ஆயிரத்திற்கு விற்கப்பட உள்ளது.
13. BMW M5:
இந்த BMW M5 காரின் M5 வேரியண்ட் விலை ரூபாய் 43 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த காரின் புதிய விலை ரூபாய் 2 கோடியே 70 ஆயிரத்திற்கு விற்கப்பட உள்ளது.
14. BMW M8:
இந்த BMW M8 காரின் M8 வேரியண்ட்டின் விலை ரூபாய் 13 லட்சத்திற்கு 60 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 2 கோடியே 38 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
15. BMW XM:
இந்த BMW XM கார் XM வேரியண்ட் ரூபாய் 5.45 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை இனிமேல் ரூபாய் 2 கோடியே 54 லட்சத்து 55 ஆயிரம் ஆகும்.
16. MINI Cooper S:
இந்த MINI Cooper S காரின் JCW Pack காரின் விலை ரூபாய் 3 லட்சத்து 10 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த MINI Cooper S காரின் புதிய விலை ரூபாய் 54 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.





















