இளநீர் குடிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இயற்கை உற்சாக பானமான இதை குடிப்பது உடல் சூட்டையும் தணிக்கிறது.
இளநீர் அஜீரணம், வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் உகந்த மருந்து போல உள்ளது. செரிமானத்திற்கு பக்க பலமாக இளநீர் உள்ளது.
இளநீர் குடிப்பதால் உடலுக்கு எலக்ட்ரோலைட் கிடைக்கிறது. இயற்கையாகவே இந்த எலக்ட்ரோலைட் கிடைப்பதால் புத்துணர்ச்சி உண்டாகிறது.
இளநீர் நார்ச்சத்து அதிகம் மிகுந்த ஒன்றாகும். இதனால், குடலின் செயல்பாடுகள் சீரடைகிறது. மலச்சிக்கலுக்கு தீர்வாகும்
இளநீரில் உள்ள ஆர்ஜினன் ரத்த ஓட்டத்திற்கு சிறந்த ஒன்றாகும். இதனால், உடல் சோர்வும் நீங்குகிறது.
சிறுநீரக கற்களைத் தடுப்பதில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. கழிவுகளை பெருக்கி சிறுநீரக பெருக்கியாக இது உள்ளது.
இதில் குறைந்த கலோரியும், கொழுப்பும் இல்லாததால் எடை குறைப்பிலும் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரத்தத்தையும், குடலையும் நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாப்பதில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் உள் அழற்சியில் இருந்து இளநீர் காப்பாற்றுகிறது.
இளநீரிலும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. புத்துணர்ச்சிக்கான கோடை கால டானிக்காகவும் இது உள்ளது.