மேலும் அறிய

Tata Altroz Racer: உற்பத்திக்கு தயாராகும் டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் - எப்படி இருக்கு மாடல்? அம்சங்கள் என்ன?

Tata Altroz Racer: டாடா நிறுவனத்தின் புதிய ஆல்ட்ரோஸ் ரேசர் கார் மாடலின் கான்செப்ட், பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Tata Altroz Racer: டாடா நிறுவனத்தின் புதிய ரேசர் கார் மாடல், ஆல்ட்ரோஸ் பிரிவில் சக்தி வாய்ந்த வாகனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Tata Altroz Racer:

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 எனப்படும், பிரம்மாண்ட ஆட்டோமொபைல் கண்காட்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்களும் தங்களது புதிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தி வருகின்றன. எதிர்காலத்தில் அறிமுகமாக உள்ள வாகனங்களுக்கான கான்செப்ட் மாடல்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், டாடா நிறுவனத்தின் புதிய ஆல்ட்ரோஸ் ரேசர் கார் மாடலின் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது. இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எப்படி இருக்கு டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் கார்?

டாடா நிறுவனத்தின் புதிய ஆல்ட்ரோஸ் ரேசர் கார், பெரும்பாலும் உற்பத்திக்கான தயார் நிலையை எட்டியுள்ளது. புதிய ​​Racer ஒரு ஹேட்ச்பேக் மாடல் என்பதோடு, Altroz ​​வரம்பை விரிவுபடுத்துகிறது என்றும் கூறலாம். டாடா கடந்த 2023ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு எடிஷனை காட்டியிருந்தாலும், புதிய எடிஷனானது செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களை  உற்சாகப்படுத்த அதிக நம்பிக்கையைத் தருகிறது. தற்போதைய சூழலில் இது இன்னும் ஒரு கான்செப்ட் கான்செப்ட் வடிவிலேயே இருந்தாலும்,  தயாரிப்பு நிலையை மிகவும் நெருங்கிவிட்டதாக தெரிகிறது.  அதே சமயம் இது Altroz ​​குடும்பத்தில் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஆல்ட்ரோஸ் ரேசர் வடிவமைப்பு விவரங்கள்:

வெளிப்புற ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை, Altroz ​​Racer ஆனது முன்புறத்தில் பேனட்டின் நடுவில் கோடுகளுடன் கூடிய ரேசியர் டூயல் டோன் நிறத்தைக் கொண்டுள்ளது. இதனால் ரேஸ் கார் போன்ற தோற்றத்துடன் மிகவும் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறது. கோடுகள் கார் முழுவதிலும் சென்று கருப்பு நிறத்தில் வெள்ளை நிறத்தில் மாறுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் வெளிப்புற நிறமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

இதர அம்சங்கள்:

புதிய 16 இன்ச் டயமண்ட் கட் அலாய்கள் கருப்பு நிறத்தில் இருப்பதோடு, காரின் உயரத்தை அதிகரிக்கிறது. அல்ட்ராஸ் ரேசர் 7 இன்ச் டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ரேசியர் இன்டீரியருடன் வருவதால், இதன் உட்புறத்தைப் பொறுத்தவரை அதிக பிரீமியம் ஆக உள்ளது. புதிய தோற்றத்திலான இருக்கைகளையும் பெற்றுள்ளது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, ரியர் ஏசி வென்ட்கள் மற்றும் பல அம்சங்களும் அடங்கியுள்ளன. காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் குரல் மூலம் இயக்கப்படும் சன்ரூஃப் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இன்ஜின் விவரங்கள்:

120 பி.எஸ். மற்றும் 170 என்.எம். ஆற்றலை உருவாக்கும் 1.2 லி டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அல்ட்ராஸ் பெட்ரோலை விட அதிக ஆற்றல் வெளிப்பாடாகும்.  இறுதியாக,  Altroz ​​Racer ஒரு DCT அல்லது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ஹுண்டாய்ன் ஐ20 என் லைன் போன்ற வாகனங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget