Automatic Cars Under 10 Lakhs: ஆட்டோமேடிக் கார் வாங்க ஆசையா? ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்கான பரிந்துரை பட்டியல் இதோ..!
Automatic Cars Under 10 Lakhs in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், சிறந்த செயல்திறன் கொண்ட ஆட்டோமேடிக் கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Automatic Cars Under 10 Lakhs in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், சில ஆட்டோமேடிக் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆட்டோமேடிக் கார்கள்:
கார் என்பது பணக்காரர்களுக்கானது என்பதை தாண்டி, தற்போது நடுத்தர வர்கத்தினர் இடையேயான பயன்பாடும் அதிகரித்துள்ளது. முன்பு மேனுவல் கியர் வாகனங்களை செலுத்துவது என்பது சிலருக்கு கடினமானதாக இருந்தது. அதனை போக்கும் வகையில் தான் தற்போது ஆட்டோமேடிக் கார்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதாவது தேவைக்கேற்ப கியரை மாற்ற வேண்டிய பணி என்பதே இந்த ஆட்டோமேடிக் கார்களில் கிடையாது. ஓட்டுனர் ஆக்சிலரேட்டரில் கொடுக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப, வாகனம் தானாகவே தனது கியரை மாற்றைக்கொள்ளும். இதுதான் ஆட்டோமேடிக் வாகனங்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், சிறந்த செயல்திறன் கொண்ட சில ஆட்டோமேடிக் கார்கள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Altroz DCA:
டாடா நிறுவனத்தின் ஆல்ட்ரோஸ் கார் மாடலானது இந்தியாவில் தற்போது 30-க்கும் மேற்பட்ட வேரியண்ட்ர்களில் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை 6.60 லட்சமாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முதியோருக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார்களை பெற்றுள்ள இந்த கார், 7 நிறங்களில் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
Amaze CVT
ஹோண்டா அமேஸ் எஸ் 1.2 பெட்ரோல் சிவிடி மாடலானது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது. கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மெட்டிராய்டு கிரே மெட்டாலிக், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக் மற்றும் பிளாட்டினம் ஒயிட் பேர்ல் ஆகிய 5 வண்ணங்களில் இது விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடக்க விலை 8.71 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Kiger CVT
ரெனால்ட் நிறுவனத்தின் கைகர் மாடல் ஆட்டோமேடிக் காரின் தொடக்க விலை, 8.47 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த பெட்ரோல் இன்ஜின், விசாலமான இடவசதி மற்றும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்கிறது.
Baleno AMT
Maruti Baleno Delta AGS ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை 8 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Pearl Midnight Black, Nexa Blue, Grandeur Grey, Splendid Silver, Luxe Beige, Opulent Red மற்றும் Arctic White என 7 வண்ணங்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.
Glanza AMT
டொயோட்டா க்ளான்ஸா 5 இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாகும். இதன் தொடக்க விலை ரூ. 6.81 லட்சம் ஆகும். மொத்தம் 9 வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என்ற இரண்டு டிரான்ஸ்மிஷன்களிலும் இந்த கார் கிடைகிறது.
TATA Tiago EV:
Tata Tiago EV ஆனது 5 இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாகும். மொத்தம் 7 வேரியண்ட்களில் இந்த கார் கிடைக்க, அதில் ஒன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ. 8.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.