Ather Rizta: ஒரே சார்ஜில் 160 கிலோ மீட்டர் மைலேஜ்.. Ather Rizta விலை எப்படி? இத்தனை வேரியண்ட்களா?
ஏதர் நிறுவனத்தின் Ather Rizta இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் இ ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இ ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்வது Ather ஆகும். ஏதர் நிறுவனம் ஏராளமான இ ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.
Ather Rizta:
ஏதர் நிறுவனத்தின் முக்கியமான இ ஸ்கூட்டர் Ather Rizta. இதன் விலை? மைலேஜ்? தரம்? ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.
Ather Rizta இ ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் 1.17 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 1.72 லட்சம் ஆகும். இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 20 வேரியண்ட்கள் உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 123 கிலோ மீட்டர் முதல் 160 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றலுடன் உள்ளது.
இந்த இ ஸ்கூட்டர் 2.9 கிலோவாட் பேட்டரி, 3.9 கிலோவாட் பேட்டரியுடன் உள்ளது. இது சார்ஜ் ஏறுவதற்கு குறைந்தது சுமார் 5.45 மணி நேரம் ஆகும்.
வேரியண்டும், விலையும்:
Rizta S, Mono - ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 842
Rizta S Super Matte - ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 842
Rizta S Mono Ather Stack Pro - ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 842
Rizta Z Mono - ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 630
Rizta Z Duo - ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 630
Rizta Z Super Matte - ரூ. 1 லட்சத்து 37 ஆயிரத்து 630
Rizta Z Mono Ather Stack Pro - ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்து 630
Rizta Z Duo Ather Stack Pro - ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 630
Rizta Z Super Matte Ather Stack Pro - ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 630
மேலே கூறிய இ ஸ்கூட்டர்கள் அனைத்தும் 2.9 கிலோவாட் பேட்டரி கொண்டது. இவை அனைத்தும் 123 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. இந்த இ ஸ்கூட்டர் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது.
Rizta S Mono - ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 282
Rizta S Super Matte - ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 282
Rizta Z Mono - ரூ. 1 லட்சத்து 56 ஆயிரத்து 012
Rizta Z Duo - ரூ. 1 லட்சத்து 57 ஆயிரத்து 012
Rizta S Mono Ather Stack Pro - ரூ. 1 லட்சத்து 57 ஆயிரத்து 282
Rizta Z Super Matte - ரூ. 1 லட்சத்து 58 ஆயிரத்து 012
Rizta S Super Matte Ather Stack Pro - ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 282
Rizta Z Mono Ather Stack Pro - ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 012
Rizta Z Duo Ather Stack Pro - ரூ. 1 லட்சத்து 77 ஆயிரத்து 012
Rizta Z Super Matte Ather Stack Pro - ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 012
இந்த இ ஸ்கூட்டர்கள் வேரியண்ட் அனைத்தும் 3.7 கிலோவாட் பேட்டரி கொண்டது ஆகும். இது சார்ஜ் ஆவதற்கு குறைந்தது 6.1 மணி நேரம் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த வேரியண்ட்கள் 159 கிலோ மீட்டர் மற்றும் 160 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம்.
பேட்டரி வாரண்டி:
இந்த இ ஸ்கூட்டரின் எடை 125 கிலோ ஆகும். 22 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது. பிஎம்எஸ் மோட்டார் இதில் உள்ளது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோ மீட்டர் பேட்டரி வாரண்டி அளித்துள்ளனர். மோட்டார் வாரன்டி 3 வருடத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. 7 இன்ச் டிஸ்ப்ளே இதில் உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி இதில் உள்ளது. 34 லிட்டர் டிக்கி வசதி இதில் உள்ளது.
நீலம், வெள்ளை, கருஞ்சிவப்பு, வெள்ளை கலந்த பச்சை, சாம்பல், வெள்ளை கலந்த மஞ்சள் என பல வண்ணங்களில் உள்ளது.





















