Ather 450: ஒரு முறை சார்ஜ் செஞ்சாலே 160 கி.மீட்டர் போலாம்.. ஏதெர் 450 இ ஸ்கூட்டரின் விலை என்ன? இத்தனை அம்சமா?
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 160 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஏதெர் 450 இ ஸ்கூட்டரின் விலை என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் தயாரிப்பிற்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த பல ஆண்டுகளாக பலரும் மின்சார ஸ்கூட்டருக்கு மாறி வருகின்றனர்.
ஏதெர் 450:
இந்தியாவில் இ ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்வது ஏதெர் ஆகும். ஏதெர் இ ஸ்கூட்டரின் ஏதெர் 450 வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள முன்னணி இ ஸ்கூட்டராக உள்ளது. இதன் சிறப்பம்சங்கள், இதன் விலை, மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

ஏதெர் 450-யின் வடிவம் இளைஞர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் ரகத்தில் அற்புதமான மாடலாக இது உள்ளது. கருப்பு, சாம்பல், நீலம் என பல வண்ணங்களில் இந்த ஏதெர் 450 உருவாக்கப்பட்டுள்ளது.
மைலேஜ் எத்தனை கி.மீட்டர்?
ஒரு முறை சார்ஜ் செய்தாலே இந்த ஏதெர் 450 இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 161 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதற்கு மிகவும் உகந்த இ ஸ்கூட்டராக இது உள்ளது. 40 கி.மீட்டர் வேகத்தை வெறும் 3.3 விநாடிகளில் எட்டி விடுகிறது. மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் செல்கிறது.

இதில் 6 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 26 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. நவீன வசதி கொண்ட தொடு திரை எனப்படும் டச் ஸ்கிரீன் உள்ளது. இதில் கூகுள் மேப், எஞ்சிய பேட்டரி சதவீதம், செல்லும் வேகம் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. லைவ் லொகேஷன் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
விலை என்ன?
செல்போனையும் இதில் இணைத்துக்கொள்ளலாம். செல்போன் கால், இசை ஆகியவற்றையும் இதில் இணைத்துக் கொள்ளலாம். வாட்ஸ் அப்-பும் டேஷ்போர்டில் பார்த்துக் கொள்ளலாம. இந்த டச் ஸ்கிரீன் 17.7 செமீட்டர் பரப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏதெர் 450 எஸ் 1.19 லட்சம் ஆகும். ஏதெர் 450 எக்ஸ் ரூபாய் 1.46 லட்சம் ஆகும். பேட்டரி இரண்டிற்கும் 8 ஆண்டுகள் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. ஏதெர் 450 எஸ் கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் உள்ளது. ஏதெர் 450 எக்ஸ் மேலே கூறிய நிறத்துடன் சிவப்பு, கருஞ்சாம்பல் ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ட்ரூ ரேஞ்ச்:
ஏதெர் 450 எஸ் ட்ரூ ரேஞ்ச் 122 கி.மீட்டர் ஆகும். ஏதெர் 450 எக்ஸ் ட்ரூ ரேஞ்ச் 126 கி.மீட்டர் ஆகும். ஏதெர் 450 எஸ் 40 கி.மீட்டர் வேகத்தை 3.9 நொடிகளிலும், ஏதெர் 450 எக்ஸ் 40 கி.மீட்டர் 3.3 நொடிகளில் எட்டுகிறது. ஏதெர் இ ஸ்கூட்டரின் விற்பனை தற்போது சக்கைப்போடு இந்தியாவில் போட்டு வருகிறது.
ஏதெர் மட்டுமின்றி ஓலா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களும் தங்களது இ ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக நல்ல மைலேஜ் தரும் வகையில் இ ஸ்கூட்டர்களை வடிவமைத்து வருகின்றனர்.
ரிஸ்டா:
ஏதெர் 450 மட்டுமின்றி ஏதெர் நிறுவனம் ரிஸ்டா மற்றும் 450 அபெக்ஸ் ஆகிய இ ஸ்கூட்டரையும் விற்பனை செய்து வருகிறது. ரிஸ்டா இ ஸ்கூட்டர் 159 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இதன் பேட்டரிக்கு 8 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 56 லிட்டர் ஸ்டோரஜ் வசதி உள்ளது. ரிஸ்டா எஸ் ரூபாய் 1 லட்சம் ஆகும். ரிஸ்டா இசட் ரூபாய் 1.14 லட்சம் ஆகும்.
450 அபெக்ஸ்:
450 அபெக்ஸ் சற்று அதிநவீன வசதிகளை கொண்ட வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 157 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும். ட்ரூ ரேஞ்ச் 130 கி.மீட்டர் ஆகும். நல்ல பிக் அப் திறன் கொண்ட இந்த அபெக்ஸ் 450 எக்ஸ் 2.9 நொடியிலே 40 கி.மீட்டர் வேகத்தை எட்டிவிடும். இதன் விலை ரூ 1.90 லட்சம் ஆகும்.





















