நாம் உண்ணும் உணவுகள் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளாக இருக்க வேண்டும்.
தயிரில் புரதம் உள்ளது. இது உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. தசை வளர்ச்சிக்கும் பக்கபலமாக உள்ளது.
நார்ச்சத்து அதிகம் உள்ளது பீன்ஸ். சதை வளர்ச்சிக்குத் தேவையான அவசியமான பொருட்கள் இதில் உள்ளது.
வேர்க்கடலையில் ஏராளமான சத்துகள் உள்ளது. புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் உள்ளது. உடல் எடையை அதிகரிக்க தகுந்த உணவாகும்.
சோயாபீன்சில் புரதம், இரும்புச்சத்து அதிகளவு உள்ளது. இது தசை வளர்ச்சிக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
பாலாடைக் கட்டியில் லூசின் அதிகளவு உள்ளது. இதில் உள்ள புரதச்சத்து உடலுக்கு உகந்தது ஆகும்.
முட்டையில் புரதச்சத்து, லூசின் உள்ளது. இந்த லூசின் தசை வளர்ச்சிக்கு ஒரு அத்தியாவசியமான அமினோ அமிலம் ஆகும்.
தாவர புரதத்தையும், கார்போஹைட்ரேட்டுகளையும் ஒருங்கிணைக்கிறது இந்த கினோவா. தசைக்குத் தேவையான கலோரியை இது வழங்குகிறது.
சாலமன் மீனில் அதிகளவு புரதமும், ஒமேகா 3 கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ளது.
உடலில் ஏதேனும் வேறு குறைகள் இருந்தால் மருத்துவரை ஆலோசித்து இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்