Ather 450 Apex: ஏதர் நிறுவனத்தின் அதிவேகமான ஸ்கூட்டர் 450 அபெக்ஸ்? - பேட்டரி. விலை விவரங்கள் உள்ளே..!
Ather 450 Apex: ஏதர் நிறுவனத்தின் அதிவேகமான மின்சார ஸ்கூட்டராக, அபெக்ஸ் 450 மாடல் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
Ather 450 Apex: ஏதர் நிறுவனத்தின் மாடல்களில் அதிகப்படியான ரேஞ்ச் வழங்கும் மின்சார ஸ்கூட்டராக, அபெக்ஸ் 450 மாடல் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏதர் மின்சார ஸ்கூட்டர்:
இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் சந்தையில் Ola Electric, TVS மற்றும் Ather Energy ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. ஓலா சமீபத்தில் S1 Pro Gen 2 ஐ மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன் அறிமுகப்படுத்தியது. இப்போது, Ather Energy ஆனது Ather 450 Apex-ஐ அதிக செயல்திறனுடன் அறிமுகப்படுத்துகிறது. ஏத்தர் தனது 10வது ஆண்டு நிறைவு விழாவை நினைவுகூரும் வகையில் அதிக செயல்திறன் கொண்ட சிறப்பு எடிஷன் 450 சீரிஸ் இ-ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தான், ஏத்தர் 450 அபெக்ஸை அந்நிறுவனம் டீஸ் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மிக சக்திவாய்ந்த மின்சார ஸ்கூட்டர் மாடலாகவும் மற்றும் அதன் தற்போதைய மின்-ஸ்கூட்டர் வரிசையில் முதலிடத்தில் இருக்கும்.
On our 10th year at @atherenergy, announcing the pinnacle of the 450 platform - Ather 450 Apex!
— Tarun Mehta (@tarunsmehta) November 29, 2023
We invited some of our community members recently to take our fastest scooter yet for a spin. Can't wait to get it on the roads next year! pic.twitter.com/dj6fgHeHKI
அதிவேகமான ஏதர் மின்சார ஸ்கூட்டர்:
”450 Apex இதுவரை அறிமுகமான Ather ஸ்கூட்டர் மாடல்களிலேயே மிகவும் வேகமானதாக இருக்கும்' என்று Ather CEO தருண் மேத்தா அண்மையில் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி, 450 அபெக்ஸ் தற்போதைய 450X போன்ற அதே 3.7kWh பேட்டரி மூலம் இயக்கப்படும். அதேநேரம், 6.4kW/26Nm என மதிப்பிடப்பட்ட 450X இல் உள்ளதை விட, அபெக்ஸில் இடம்பெறும் மோட்டார் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. Ather 450 Apex ஆனது 100kph வரம்பை மீறக்கூடும். அதோடு, ஏற்கனவே இருக்கும் zippy Ather 450X உடன் ஒப்பிடுகையில் 0-40kph ஆக்சிலரேஷனையும் சிறப்பாகக் கொண்டிருக்கலாம். 450 அபெக்ஸ், ஏத்தர் 450X சீரிஸ் 1 ஆல் ஈர்க்கப்பட்ட வெளிப்படையான பக்க பேனல்களையும் கொண்டிருக்கக்கூடும். 450X மற்றும் 450S இலிருந்து வேறுபடுத்துவதற்கு வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டிருக்கலாம் . இது தவிர, 450S மற்றும் 450X ஆகிய இரண்டின் HR வகைகளிலும் Ather பணியாற்றி வருகிறது. வடிவமைப்பைப் பொறுத்தமட்டில், Ather 450 Apex தற்போதைய 450X ஐப் போலவே தெரிகிறது. ஒரு பெரிய 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை வழங்கப்பட்டு இருக்கும்.
விலை விவரங்கள்:
450 அபெக்ஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். 2023 ஆண்டு முடிவடைவதற்கு முன்பே அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. . 450 அபெக்ஸ் விலை 450X (ரூ. 1.68 லட்சம்) ஐ விட பிரீமியமாக இருக்கும், மேலும் இதன் விலை ரூ. 2 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.