மேலும் அறிய

பட்ஜெட் விலையில் புது கார் வாங்க இதுதான் கரெக்ட் டைம்! ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த பிரபல நிறுவனம்..மிஸ் பண்ணிடாதீங்க!

Renault நிறுவனம், தனது Kiger, Triber & Kwid கார்களில் பெரும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. Kiger-இல் ரூ.68,000 வரை, Triber-இல் ரூ.60,000 வரை, Kwid-இல் ரூ.40,000 வரை பலன்கள் பெறலாம்.

Renault Car Discounts August 2026: புதிய கார் வாங்கப் போகிறவர்களுக்கு Renault ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. இந்த மாதத்திலேயே (ஆகஸ்ட் 2026) கார் வாங்குபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட Duster-ஐத் தவிர மற்ற அனைத்து மாடல்களிலும் கவர்ச்சிகரமான பலன்களை இந்த நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகைகள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை செய்யப்பட்ட புக்கிங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த மாதத்தில் Renault Kiger-க்கு அதிகபட்ச தள்ளுபடி கிடைக்கிறது. Kwid-இல் குறைந்த பலன்கள் உள்ளன. Kiger & Triber வாங்குபவர்களுக்கு லாயல்டி பெனிபிட்ஸ், கார்ப்பரேட் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. 

ரெனால்ட் கைகர்

இந்த மாதத்தில் Renault Kiger வாங்குபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.68,000 வரை பலன்கள் கிடைக்கும். கேரளா, குஜராத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். இதில் ரூ.20 ஆயிரம் வரை பணத் தள்ளுபடி உள்ளது. பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கோ அல்லது ஸ்கிராப்பேஜ் கீழ் கொடுப்பவர்களுக்கோ ரூ.25 ஆயிரம் வரை கூடுதல் பலன் கிடைக்கும். ஏற்கனவே Renault வாகனம் உள்ளவர்களுக்கு ரூ.18 ஆயிரம் வரை லாயல்டி பெனிபிட் கூட உள்ளது. கூடுதலாக ரூ.5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடியையும் வழங்குகின்றனர்.

கேரளா, குஜராத் மாநிலங்களில் மட்டும் Kiger-க்கு சலுகைகள் சற்று வேறுபடுகின்றன. அங்கு கேஷ் தள்ளுபடி அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை உள்ளது. எக்ஸ்சேஞ்ச் பலனும் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கிறது. லாயல்டி பெனிபிட் & கார்ப்பரேட் தள்ளுபடி மட்டும் மற்ற மாநிலங்களைப் போலவே தொடர்கின்றன. தற்போது Renault Kiger எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.81 லட்சம் முதல் ரூ.10.40 லட்சம் வரை உள்ளது.

ரெனால்ட் ட்ரைபர்

Renault Triber-இலும் நல்ல சலுகைகள் உள்ளன. கேரளா, குஜராத் தவிர மற்ற மாநிலங்களில் இந்த MPV-க்கு அதிகபட்சமாக ரூ.60,000 வரை பலன்கள் கிடைக்கின்றன. இதில் ரூ.15 ஆயிரம் பணத் தள்ளுபடி உள்ளது. ஸ்கிராப்பேஜ் கீழ் ரூ.25 ஆயிரம் வரை அல்லது எக்ஸ்சேஞ்ச் கீழ் ரூ.15 ஆயிரம் வரை பெனிபிட் பெறலாம். கூடுதலாக ரூ.5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

கேரளா , குஜராத் மாநிலங்களில் Triber-க்கு பணத் தள்ளுபடி ரூ.30 ஆயிரம் வரை உள்ளது. எக்ஸ்சேஞ்ச் பலனும் ரூ.30 ஆயிரம் வரை கிடைக்கிறது. ஸ்கிராப்பேஜ் & கார்ப்பரேட் பெனிபிட்ஸில் எந்த மாற்றமும் இல்லை. Triber எக்ஸ்-ஷோரூம் விலை தற்போது ரூ.5.81 லட்சம் முதல் ரூ.8.53 லட்சம் வரை உள்ளது.

ரெனால்ட் க்விட்

என்ட்ரி லெவல் ஹாட்ச்பேக் Renault Kwid-இலும் சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன. நாட்டின் பல மாநிலங்களில் ரூ.15,000 வரை கேஷ் தள்ளுபடி & ரூ.25,000 வரை ஸ்கிராப்பேஜ் பெனிபிட் கிடைக்கிறது. மொத்தத்தில், ரூ.40 ஆயிரம் வரை பலன் பெறலாம்.

ஆனால் Kwid-க்கு அறிவிக்கப்பட்ட இந்த சலுகை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தாது. கேரளா, அசாம், கர்நாடகா, ஒடிசா, உத்தரகாண்ட், தெலங்கானா, சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசத்தில் பணத் தள்ளுபடி ரூ.30 ஆயிரம் வரை உள்ளது. ஸ்கிராப்பேஜ் பெனிபிட் மட்டும் அதேபோல தொடர்கிறது. Kwid எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.53 லட்சம் முதல் ரூ.5.61 லட்சம் வரை உள்ளது.

நகரத்தைப் பொறுத்து, டீலரைப் பொறுத்து, ஸ்டாக் கிடைப்பைப் பொறுத்து இந்த சலுகைகளில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று Renault தெரிவித்துள்ளது. எனவே, புதிய கார் புக் செய்வதற்கு முன் உங்கள் அருகிலுள்ள Renault டீலரைத் தொடர்புகொண்டு முழு விவரங்களையும் தெரிந்துகொள்வது நல்லது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vespa Electric Scooter: 3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
Compact SUV: டக்கரான குட்டி கார்கள் தான் டார்கெட்டா..! அப்க்ரேட்களுடன் வரும் 3 எஸ்யுவிக்கள் - விலை, அம்சங்கள், வசதி
டக்கரான குட்டி கார்கள் தான் டார்கெட்டா..! அப்க்ரேட்களுடன் வரும் 3 SUVக்கள் - விலை, அம்சங்கள், வசதி
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?
Force e-Traveller: வரப்போது மின்சார டெம்போ வேன்! ஃபோர்சா வேலை பார்க்கும் Force நிறுவனம்! எப்போது அறிமுகம்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
Embed widget