மேலும் அறிய

Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?

Hyundai Creta EV: க்ரேட்டா மின்சார எடிஷனின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக, மறுவிற்பனையின் போது 60 சதவிகித மதிப்பு வழங்கப்படும் என ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

Hyundai Creta EV: ஹுண்டாய் க்ரேட்டா மின்சார எடிஷன் அதன் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் அளவிற்கு எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாகி ஒரு தசாப்தத்தை கடந்த பிறகும், ஹுண்டாயின் க்ரேட்டா எஸ்யுவி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்து வருகிறது. இதன் விளைவாக எதிர்கால சூழலை கருத்தில் கொண்டு, க்ரேட்டாவின் மின்சார எடிஷனையும் தென்கொரிய நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் இது ப்ராண்டின் மின்சார வாகன விற்பனையை அதிகரிக்க உதவியது, பயனர்களிடையேயும் நல்ல வரவேற்பையும் பெற்றது. ஆனால், காலப்போக்கில் க்ரேட்டா மின்சார எடிஷனின் விற்பனை தொடர்ந்து சரிந்து, எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை. இந்நிலையில், இந்த காரின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக மறுவிற்பனையில் உறுதியளிக்கப்பட்ட மதிப்பை வழங்குவதாக ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. 

க்ரேட்டா EV-க்கு 60% பை-பேக் ஆஃபர்

ஹுண்டாய் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, க்ரேட்டா மின்சார எடிஷனை வாங்கிய 3 ஆண்டுகளுக்குள் அல்லது 45 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிப்பதற்கு முன்பாக மறுவிற்பனை செய்தால் 60 சதவிகித மதிப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மின்சார வாகன உரிமையைச் சுற்றியுள்ள மிகப்பெரிய கவலைகளில் ஒன்றான மறுவிற்பனை மதிப்பின் மீதான நிச்சயமற்ற தன்மையைக் குறைந்துள்ளது. அதாவது ஒருவேளை குறிப்பிட்ட காலவரையறை அல்லது பயண வரையறைக்குள், சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் வாங்கிய காரை டீலர் அல்லது உற்பத்தியாளரிடம் மீண்டும் வழங்கினால், உரிய நடைமுறைகளை பின்பற்றி சுமார் 12 லட்சம் வரை பணத்தை திரும்பப் பெறமுடியும். 

ஹுண்டாய் க்ரேட்டா EV - விலை, போட்டியாளர்கள்

ஹுண்டாய் க்ரேட்டா மின்சார எடிஷனின் விலை ரூ. 18.03 லட்சம் முதல் ரூ. 23.67 லட்சம் ( எக்ஸ்-ஷோரூம் ) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட செலவைக் குறைப்பதற்காக, இந்நிறுவனம் ரூ. 10.99 லட்சத்தில் தொடங்கும் வாடகை பேட்டரி (BaaS) திட்டத்தையும், அதனுடன் ஒரு கி.மீ.க்கு ரூ. 3.9 என்ற பேட்டரி EMI (42kWh பேட்டரி பேக்கிற்கு) வசதியையும் வழங்குகிறது வழங்குகிறது.

மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் இந்த காரானது உள்ளூரில் டாடா சியரா EV (ரூ. 18.79 லட்சம்-26.48 லட்சம்), டாடா கர்வ் EV (ரூ. 16.99 லட்சம்-19.19 லட்சம்), வின்ஃபாஸ்ட் VF6 (ரூ. 18.19 லட்சம்-20.09 லட்சம்), மஹிந்திரா BE 6 (ரூ. 18.90 லட்சம்-26.90 லட்சம்), MG ZS EV (ரூ. 17.99 லட்சம்-20.75 லட்சம்), டொயோட்டா எபெல்லா (ரூ. 23.60 லட்சம்) மற்றும் மாருதி இ விட்டாரா (ரூ. 15.99 லட்சம்-19.99 லட்சம்) போன்ற மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது. வின்ஃபாஸ்ட், MG, டொயோட்டா மற்றும் மாருதி EV-களில் பைபேக் திட்டங்கள் உள்ளன, ஆனால் டாடா மற்றும் மஹிந்திரா EV-களில் அவை வழங்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்: Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்

ஹுண்டாய் க்ரேட்டா EV - பேட்டரி ரேஞ்ச் விவரங்கள்

ஹுண்டாய் க்ரேட்டா மின்சார எடிஷனானது 42kWh மற்றும் 51.4kWh என இரண்டு லித்தியம்-அயன் பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 42kWh பேட்டரி பேக் 420 கி.மீ. தூரமும், பெரிய 51.4kWh பேட்டரி பேக் 510 கி.மீ. தூரம் ரேஞ்ச் அளிக்கும் என்றும் ஹுண்டாய் அறிவித்துள்ளது. முன்பக்கம் பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் லாங் ரேஞ்ச் எடிஷனில் 171hp சக்தியை உற்பத்தி செய்கிறது. அதே சமயம், சிறிய பேட்டரி பேட்டரி 135hp சக்தி கொண்ட மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

7.4kW AC சார்ஜரைப் பயன்படுத்தி, 42kWh மற்றும் 51.4kWh பேட்டரி பேக்குகளை முறையே 6 மணிநேரம் மற்றும் 7.15 மணிநேரத்தில் 10 முதல் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இரண்டு பேட்டரிகளும் சுமார் 100kW வேகத்தில் 39 நிமிடங்களில் DC ஃபாஸ்ட்-சார்ஜிங் மூலம் 10 முதல் 80 சதவிகித நிலையை எட்டும் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Creta EV: விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
விற்பனையில் சொதப்பிய க்ரேட்டா மின்சார எடிஷன்.. 60% பை-பேக் ஆஃபரை போட்ட ஹுண்டாய் - தேறுமா?
Kia Sorento: மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
மைலேஜ் பிரியர்களே..! செப்.4ம் தேதி களமிறங்கும் கொம்பன் - ஹைப்ரிட் & டீசல் ஆப்ஷன் -புக்கிங் ஸ்டார்ட்
Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget