Toyota Camry Hybrid facelift: சார்ஜ் போட வேண்டாம்.. ஸ்மூத் ட்ரைவிங்.. Toyota Camry Hybrid காரின் சிறப்பம்சங்கள்..!
கேம்ரி ஹைப்ரிட் ஃபேஸ்லிப்ட் காரின் சிறப்பம்சங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்
ஹைப்ரிட் கார்கள் என்றால் என்ன?
ஹபிரிட் கார்கள் என்பவை இன்டெர்னல் கம்பஷன் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆகிய இரண்டையும் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதாவது இந்தக் கார்களை பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் பவர் ஆகிய இரண்டை கொண்டும் இயக்க முடியும். அனைத்து ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் இந்த டெக்னாலாஜியை தங்களது கார்களை புகுத்தி வரும் நிலையில், பிரபல நிறுவனமான டொயோட்டா தனது கேம்ரி ஹைப்ரிட் ஃபேஸ்லிப்ட் காரை அறிமுகப்படுத்தி உள்ளது.
கேம்ரி ஹைப்ரிட் ஃபேஸ்லிப்ட் - என்ன அம்சங்கள்
இந்தக்காரை பலமான ஹைப்ரிட் கார் என அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது. அதற்கு காரணம் இந்த வகையான பலமான ஹைப்ரிட் காரில் பெட்ரோல் இன்ஜின், பேட்டரி, எலக்ரிக் மோட்டார் ஆகிய மூன்று இடம்பெற்று இருக்கிறதாம். இந்த எலக்ட்ரிக் மோட்டாரானது எலக்ரிக் பவர் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டை கொண்டும் இயங்குமாம். ஆனால் மைல்டு எலக்ட்ரிக் காரானது, தனியாக எலக்ட்ரிக் பவர் கொண்டு இயங்காது. இதில் இருக்கும் பேட்டரியானது இன்ஜினில் இருந்து கிடைக்கும் பவர் கொண்டு இயங்குவதால், எலக்ட்ரிக் காரில் பேட்டரிக்கு சார்ஜ் செய்வது போல இதனை சார்ஜ் செய்யத் தேவையில்லை.
இந்தக்கார் 24 கிமீ மைலேஜ் கொடுக்கும் என சொல்லப்படும் நிலையில், நடப்பில் 15 முதல் 16 கிமீ வரை தருகிறது. சப்காம்பேக்ட் எஸ்.யூ.வி கார்களை விட இந்த கார் இன்னும் நமது பயணத்தை எளிதாக்குகிறது. காரணம் இதில் இருக்கும் EV மோடை பயன்படுத்தி சிறிய தூர பயணங்களை, குறைவான வேகத்தில் நம்மால் முடிக்க முடியும். ட்ராஃபிக்கில் இருக்கும் போது, அதிக இரைச்சல் இல்லாமலும் பயணம் செய்ய முடியும்.
அதிவேகத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 178 Bhp பவர், 2.5 லிட்டர் கொண்ட பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ள இந்தக்காரில் CVT கியர் கொடுக்கப்பட்டுள்ளது. இவைத்தவிர 3 சோன் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், ரியர் கேமரா, நல்ல சஸ்பென்ஷன் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டு வெளிவந்திருக்கும் இந்த கார் 43.4 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.