Yogini Ekadashi | இன்று அனுசரிக்கப்படும் யோகினி ஏகாதசி பற்றி தெரியுமா?
இந்த ஆண்டு ஜூலை 5, 2021 திங்கள் அன்று யோகினி ஏகாதசி 2021 அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூலை 5, 2021 திங்கள் அன்று யோகினி ஏகாதசி 2021 .அனுசரிக்கப்படுகிறது. வட இந்திய இந்து நாட்காட்டியின் படி, கிருஷ்ண பக்ஷத்தின் போது ஆஷாதா மாதத்தில் யோகினி ஏகாதசி கொண்டாடப்படுகிறது, அதே நேரத்தில் தென்னிந்திய இந்து நாட்காட்டியின் படி, யோகினி ஏகாதசி ஜெயஷ்ட மாதத்தின் கிருஷ்ண பக்ஷாவின் போது அனுசரிக்கப்படுகிறது. எல்லா ஏகாதசிகளையும் போலவே, யோகினி ஏகாதசியும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
யோகினி ஏகதேசி நாள் - ஜூலை 5, 2021, திங்கள் கிழமை
ஏகதேசி தொடங்கும் நேரம் - 07:55 PM, ஜுலை 4, 2021
ஏகதேசி முடியும் நேரம் - 10:30 PM, ஜூலை 5, 2021
புரண நேரம் - 05:29 AM to 08:16 AM, ஜூலை 6 , 2021
புரண நேரம் துவாதசி முடியும் நேரம் - 01:02 AM, ஜூலை 7, 2021
இந்த யோகினி ஏகாதசியின் பயன்கள் என்ன? - இந்த ஏகாதசியின்போது , பக்தர்கள் முழு நேரம் விரதம் இருப்பார்கள். ஒருவருக்கு உணவு அளிக்கும்போது கிடைக்கும் நன்மைகளும், இந்த நாளில் விரதம் இருக்கும் போது கிடைக்கும் நன்மைகளும் ஒன்றாக .இருக்கும். இந்த நன்னாளில் விரதம் இருப்பது, பக்தர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களில் இருந்து, விலகவும், வாழ்க்கையில் செழிப்பாக இருக்கவும் உதவும் என நம்பப்படுகிறது
ஆண்டின் 24 ஏகாதசி நாட்கள் உள்ளது. ஒவ்வொரு மாதமும், அமாவாசை முடிந்த 11ஆம் நாள் ஏகதேசி நாளாகவும், பௌர்ணமி முடிந்த 11ஆம் நாள் ஏகாதசி நாளாகவும் உள்ளது. இதில் மார்கழி மாதத்தில் வரும் ஏகதேசி சிறப்பு வாய்ந்தது. அன்று அனைத்து விஷ்ணு ,தளங்களிலும், சிறப்பான பூஜை புனஸ்காரங்கள் நடக்கும்.
ஏகதேசி தினம் கடவுள் விஷ்ணுக்கு உகந்த நாளாகவும், அன்று கடவுள் விஷ்ணு பக்தர்கள் விரதம் இருப்பார்கள். தன்னுடைய பாவங்கள் நீங்கவும், வாழ்வில் செழித்து வாழவும் அன்றைய தினத்தில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு என நம்பப்படுகிறது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி அன்று , ஸ்ரீரங்கம் விஷ்ணு தளத்தில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்வு நடைபெறும். அந்த வாசலில் தங்க பல்லி இருப்பதாகவும், அன்றைய தினத்தில் அதை தரிசிப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.
இது போன்று ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி பல நன்மைகளை கொண்டுள்ளது. இந்த மாதம், இந்த நாளில் இம்முறை யோகினி ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது