மேலும் அறிய

JOB - Astrology: வேலை வேண்டுமா? -  நவகிரகங்களில் இவரை பிடித்தால் போதும் !!!

JOB - Astrology: வேலை எளிதாக கிடைக்க பெற என்ன செய்ய வேண்டும் என ஜோதிடரான ஜோதிட ரத்ன ஷியாம் கூறியவற்றை பார்ப்போம். 

அன்பார்ந்த abp நாடு வாசகர்களே   உங்களுக்கு வேலை வேண்டுமென்றால் சனி பகவானின் காலில்  சரணாகதி அடைந்தாலே போதும்!

 அதற்கு முன்பாக ஜாதகத்தில்  உங்களின் வேலையை குறைக்கக்கூடிய 10 ஆம் அதிபதியை பற்றி பார்த்துவிட்டு வருவோம்…

வேலை ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றி அமையாது.  அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை  வேலை செய்தால் நாம் சம்பாதிக்கலாம்.  ஒவ்வொரு ஜாதகத்திற்கும் அவர்களின் லக்கினத்திற்கு பத்தாம் பாவத்தில் எந்த கிரகம் அமர்ந்திருக்கிறதோ,  அந்த கிரகமே அவரின் தொழிலை முடிவு செய்யும்.  அல்லது ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்தாம் அதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார் அவரே ஜாதகரின் தொழிலை முடிவு செய்வார்.

 10-ம் மட்டுமே தொழில் ஸ்தானம் :

 ஒருவரின் ஜாதகத்தில்  லக்னத்திற்கு பத்தாம் இடம் மட்டுமே அவரின்  தொழிலை முடிவு செய்ய முடியும்.  மற்றபடி  வேறு எந்த பாவத்தாலும் அவரின் தொழிலை முடிவு செய்து விட முடியாது.  வீட்டிலிருந்து ஒருவர் வேலைக்கு கிளம்ப வேண்டும் என்றால்  அந்த இடம் 10.  அந்தப் பத்தாம் பாவகம் தான் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை சுட்டிக்காட்டும்.  பணம் சம்பாதிப்பது  பணம் வரும் வழி போன்றவை மற்ற பாவங்கள் தான் குறிக்கும்.  நீங்கள் வேலையே செய்யாமல் பணம் வரும் என்று நினைத்தால் கூட  அதற்கு இரண்டு மற்றும் பதினோராம் பாவங்கள் வேலை செய்ய வேண்டும்.  ஆனால் ஏதேனும் ஒரு தொழில் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு 10 ஆம் பாவகம் மட்டுமே உரிமையாளர்.

வேலை அமைய யாரை வணங்க வேண்டும் ?

 உங்களுடைய பிறப்பு ஜாதகத்தில் பத்தாம் அதிபதி யாரோ  அவர்தான் உங்களுக்கு வேலையை கொடுக்கப் போகிறவர்.  உதாரணத்திற்கு நீங்கள் சிம்ம லக்கனம் என்று வைத்துக் கொண்டால் பத்தாம் அதிபதி சுக்கிரன் வருவார்  அப்படி என்றால் சுக்கிரனின் அதி தேவதையான மகாலட்சுமியையோ  அல்லது சக்தி வழிபாட்டையோ, மேற்கொள்ள வேண்டும்.  மற்றொரு உதாரணமாக நீங்கள் விருச்சக லக்கனம் என்று வைத்துக் கொண்டால் பத்தாம் அதிபதி சூரியன்  அவரின் அதிதேவதை சிவபெருமான்.  இப்படியாக  உங்கள் பிறப்பு ஜாதகத்தில் லக்னம் என்று போடப்பட்டிருக்கும் இடத்திலிருந்து பத்தாம் வீட்டு  அதிபதி  யாரோ அவரின் அதி தேவதையை நீங்கள் வணங்கினால் மட்டுமே போதும் நீங்கள் எதிர்பார்க்கும் வேலை உங்களுக்கு சுலபமாக கிடைத்துவிடும்.

ஜாதகத்தில் பத்தாம் அதிபதி பற்றி தெரியவில்லையா ?  -  கவலை வேண்டாம்!!!

 அன்பார்ந்த வாசகர்களே படிக்கின்ற பலருக்கு உங்களின் ஜாதகங்கள் பற்றி தெரியாமல் இருக்கலாம் சிறு வயதில் உங்கள் ஜாதக குறிப்பை எழுதி வைத்துவிட்டு பின்னர்  சமயம் வரும்போது மட்டும் அதைப்பற்றி  ஜோதிடரிடம் கொடுத்து தகவல்களை பெற்றுக் கொண்டிருக்கலாம்.  இந்த மாதிரியான சமயத்தில் பத்தாம் அதிபதி எனக்கு தெரியவில்லை யாரை கும்பிடுவது என்று குழப்பத்தில் கூட இருக்கலாம் கவலை வேண்டாம்.  நவகிரகங்களில் இருக்கும் சனி பகவானை வணங்கி வாருங்கள்  உங்களுக்கான வேலை உங்களைத் தேடி தானாக வரும்.  ஒரு கட்டத்தில்  வேலை தேடி அலுத்து போனவர்கள் அனைவரும் சரணாகதி அடைவது சனி பகவானின் காலில் தான்.

 ஆம் சனி பகவான்  எந்தெந்த  விஷயங்களுக்கு காரகனாக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

  1.   வேலை
  2.  ஆயுள்
  3.  உழைப்பாளி
  4.  நமக்கு கிடைக்கின்ற வேலை ஆட்கள்
  5.  சித்தப்பா

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்  இது அத்தனையும் நீங்கள் ஒன்று சேர்த்து பார்த்தால் கூட வேலை சம்பந்தமான காரியங்கள் மட்டுமே அதிகப்படியாக இருக்கும்.  ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் ஆட்சியோ உச்சமும் பெற்று விட்டால் அல்லது மிகப்பெரிய பலம்  பொருந்தி அவர் அமர்ந்து விட்டால் சொல்லவே தேவையில்லை வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்று விடுவார்கள்.

  1. Facebook  நிறுவனர் மார்க்  ஜாதகத்தில் சனி உச்சம்.

  1. Apple  நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இன் ஜாதகத்தில் சனி உச்சம்

  1. Jackie Chan  ஜாதகத்தில் சனி உச்சம்

  1. கலைஞர் கருணாநிதி ஜாதகத்தில் சனி உச்சம்

  1. முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஜாதகத்தில் சனி உச்சம்

  1. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி யார் ஜாதகத்தில் சனி உச்சம்

 எவராலும் தொட முடியாத இரண்டு மிகப்பெரிய கம்பெனிகளை உருவாக்கிய இருவரின் ஜாதகத்திலும் ஒரே மாதிரியான அமைப்பு  இருவரும் கூறும் ஒரே வார்த்தை கடினமான உழைப்பு என்பதுதான்.  இப்படியான உழைப்புக்கு பேர் போன சனி பகவானை  நீங்கள் சனிக்கிழமை மட்டும் வணங்க வேண்டியது இல்லை எந்த நாளிலும் எந்த நேரத்திலும் அவரை வணங்கலாம்.  சனிபகவானின் சிறப்பு அம்சமே தன்னை நாடி வருவோரை  கைவிடாமல் காத்து நல்ல வேலையை கொடுத்து கவுரவமாக வாழ வைப்பது தான்.  சனிபகவானை வணங்குங்கள் உடனடியாக நல்ல வேலையை பெறுங்கள் வாழ்த்துக்கள்.

குறிப்பு: இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலானது , ஜோதிடரின் தனிப்பட்ட கருத்தாகும். ஏபிபி நாடுவின் கருத்தல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget