கரூரில் ஆடி மாதத்தையொட்டி 1000 மீட்டர் தாலி கயிரை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்...!
கரூர் மாவட்டத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு தளவாபாளையம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆயிரம் மீட்டர் தாலி கயிற்றுடன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை.
கரூரில் உள்ள தளவாபாளையம் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஆயிரம் மீட்டர் நீள தாலிக்கயிற்றில் சுவாமிக்கு செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தை ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர். மாரியம்மனுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தி பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து அழகு ஆயிரம் மீட்டர் நீள தாலி கயிற்றால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து ஆலய வாசலில் உற்சவர் மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக காணிக்கையாக 25க்கும் மேற்பட்ட வண்ண சேலைகளால் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
அதேபோல் தோட்டக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலயத்திலும் அம்மனுக்கு ஆயிரத்து எட்டு ஜோடிகளால் வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை கண்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் தோட்டக்குறிச்சி அருள்மிகு அங்கயற்கண்ணி அம்மை, செந்தமிழ் சொக்கநாதர் ஆலயத்தில் சுவாமிக்கு அதிகாலை 3 மணியளவில் எண்ணெய் காப்பு சாற்றி, பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அம்பிகைக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.