மேலும் அறிய

Samayapuram Kumbabishekam: கோலாகலமாக நடந்த சமயபுரம் கோவில் கும்பாபிஷேகம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கோவிலின் முன்பகுதியான கிழக்குப் பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூபாய் 21/2 கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில், ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரை சேர்ந்த பொன்னர் - சங்கர் என்ற இரட்டை சகோதரர்கள் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தனர். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடிவுற்றது.

Samayapuram Kumbabishekam: கோலாகலமாக நடந்த சமயபுரம் கோவில் கும்பாபிஷேகம் -  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

இதனை தொடர்ந்து இன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் புதிய ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, இதற்காக ராஜகோபுரத்தின் உச்சியில் கும்ப கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று (செவ்வாய்க் கிழமை) விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனத்துடன் இரண்டாம் கால யாகச்சாலை பூஜையும், மாலை, 5.30 மணிக்கு மேல் இரவு, 8 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மூன்றாம் கால யாகச்சாலை பூஜையும் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தையொட்டி, அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை, 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் மற்றும் நான்காம் கால யாகச்சாலை பூஜை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, காலை, 6.45 மணிக்கு மேல் தொடங்கி 7.25 மணிக்குள், ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மன் கோயில் மின்னொளியில் ஜொலிக்கிறது. கும்பாபிஷேகத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்துள்ளனர். இதனால், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில், எஸ்.பி. சுஜித்குமார் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Samayapuram Kumbabishekam: கோலாகலமாக நடந்த சமயபுரம் கோவில் கும்பாபிஷேகம் -  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

மேலும், குற்ற சம்பவங்களைத் தடுக்கும் விதமாக, சமயபுரம் நால்ரோடு பகுதி முதல், கோயில் வரை கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று ஏற்படாத வண்ணம் தனியார் மற்றும் அரசு மருத்துவத்துமனைகள் சார்பில், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமயபுரம் ராஜகோபுர கும்பாபிஷேகத்தையொட்டி திருச்சியே திருவிழாக்கோலம் பூண்டது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Embed widget