Sabarimala Temple: நவம்பர் 16ல் மண்டல மகர விளக்கு பூஜை தொடக்கம்: தினமும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி..!
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தொடங்கும் போது தடுப்பூசி போடப்பட்ட 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தொடங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. பூஜை தொடங்கும் போது தடுப்பூசி போடப்பட்ட 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்தானம், போக்குவரத்து, வனத்துறை, சுகாதாரம் மற்றும் நீர்வள அமைச்சர்கள் மற்றும் மாநில காவல்துறைத் தலைவர், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தேவைப்பட்டால் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் நோய மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா ஒன்றாக இருந்து வருகிறது. நாடு முழுவதும் தினசரி பதிவு செய்யப்பட்ட மொத்த நோயாளிகளில் பாதியை பதிவு செய்துள்ளது.
மண்டல-மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு அரசு விதித்துள்ள சில விதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. ஆரம்ப நாட்களில் மொத்தம் 25,000 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் இந்த எண்ணில் மாற்றங்கள் பின்னர் செய்யப்படலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
2. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போடப்பட்டவர்கள் அல்லது ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு செல்பவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும்.
3. 10 வயதிற்குட்பட்ட மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
4. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எருமேலி வழியாக வனப்பாதையில் அல்லது புல்மேடு வழியாக சன்னிதானம் செல்லும் பாரம்பரிய வழியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், பக்தர்கள் பம்பா ஆற்றில் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5. பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கிருந்து, கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பேருந்துகள் மூலம் அவர்கள் செல்லலாம்.
6. பக்தர்கள் 'நெய்அபிஷேகம்' (அபிஷேகம் செய்யப்பட்ட நெய்) அபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தேவஸ்தானம் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அவர்கள் தரிசனத்திற்குப் பிறகு சான்னிதானத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பக்தர்களுக்கு போதுமான கழிப்பறை வசதிகள் மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார். உடல் நல பரிசோதனைக்குப் பிறகே பயணம் மேற்கொள்ளுமாறு நோய்களால் பாதிக்கப்பட்ட பக்தர்களை அவர் எச்சரித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்