மேலும் அறிய

Today Rasipalan January 22: மேஷத்துக்கு பெருமை.. மீனத்துக்கு இன்பம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: ஜனவரி 22 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 22.01.2024 - திங்கள் கிழமை

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 9.00 மணி வரை

குளிகை:

மாலை 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

எமகண்டம்:

நண்பகல் 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதமாக முடியும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு ஏற்படும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். பெருமை நிறைந்த நாள்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனை மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளில் விவேகம் வேண்டும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். சிறு சிறு விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும்.  கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அமைதி நிறைந்த நாள்.

மிதுனம்

எடுத்த காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.  தேக ஆரோக்கியத்தில் பொலிவு வேண்டும். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்பு சாதகமாகும். உழைப்பு நிறைந்த நாள்.

கடகம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிற இன மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பொதுவாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். ஆக்கப்பூர்வமான நாள்.

சிம்மம்

சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனை மேம்படும். நிர்வாக துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

கன்னி

மனதளவில் இருந்துவந்த சோர்வு நீங்கும். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். சுபகாரியம் சார்ந்த செலவுகள் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.

துலாம்

எண்ணிய பணிகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். செயல்களில் தடைகள் உண்டாகும். குடும்ப விஷயத்தை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புரிதல் மேம்படும் நாள்.

விருச்சிகம்:

புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமிர்த்தமாக புதிய வாய்ப்பு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

தனுசு

இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.  நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கு உதவி கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.

மகரம்

எதிர்பார்த்த சில காரியங்களில் போராடி வெற்றி பெறுவீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் உண்டாகும். பெற்றோர்கள் ஆதரவுடன் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள். நட்பு நிறைந்த நாள்.

கும்பம்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். முயற்சி நிறைந்த நாள்.

மீனம்

அரசு விவகாரத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.  சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Embed widget