Pradosham: இன்று பிரதோஷம்...! இதை எல்லாம் கண்டிப்பா செய்யக்கூடாது..! இதைத்தான் செய்யனும்..
இந்த மாத பிரதோச விரதம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்து சாஸ்திரப்படி கிருஷ்ண பக்ச அல்லது த்ரயோதசி திதி அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் சிவனுக்கு உகந்த நாள்.
பிரதோஷம்:
இந்த மாத பிரதோச விரதம் இன்று (டிச.21) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கடைசி பிரதோசம் என்பதால் இதை கடைபிடிப்பது மிகவும் உன்னதமானது. இந்து சாஸ்திரப்படி கிருஷ்ண பக்ச அல்லது த்ரயோதசி திதி அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் சிவனுக்கு உகந்த நாள். நாளைய பிரதோசம் மிகவும் முக்கியமானது ஏனெனில் இன்று சர்வர்த சித்தி யோகமும் அமிர்த சித்தி யோகம் இணைந்து வருகிறது.
சிவனை வணங்குவதன் மூலம் விரும்பியவை வாய்க்கும். அதனால் பிரதோச தினத்தில் சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. போபாலை சேர்ந்த வாஸ்து சாஸ்திர நிபுணரும், ஜோதிட நிபுணருமான பண்டிட் ஹிதேந்திர குமார் சர்மா சில நுணுக்கங்களை தெரிவித்துள்ளார்.
பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது:
பிரதோச விரதத்தன்று பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது. பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம் என்பதால் பிரதோச நாளில் பெண்கள் சிவலிங்கத்தை தொடக் கூடாது.
மஞ்சள் கூடாது
பிரதோச தினத்தன்று சிவபெருமானுக்கு மஞ்சள் படைக்கக் கூடாது. சிவலிங்கம் ஆண்மையின் அடையாளம். அதனால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் பூசக் கூடாது. அதற்குப் பதிலாக லிங்கத்தின் மீது சந்தனம், விபூதி, கங்கை நீர், பால், பாங் ஆகியவற்றை பூசலாம்.
இவற்றையெல்லாம் படைக்கக் கூடாது
சிவலிங்கத்திற்கு தேங்காய் தண்ணீர், சங்கு தண்ணீர், சங்கு புஷ்பம், லவங்க இலை, குங்குமம் ஆகியனவற்றை படைக்கக் கூடாது. இவற்றைப் படைத்தால் சிவபெருமான் கோபமடைவார்.
பிரதோசத்தன்று என்ன சாப்பிட வேண்டும்?
பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது. பெண்கள் பூண்டு, வெங்காயம், கத்தரிக்காய், கீரை வகைகள் சாப்பிடக் கூடாது. இறைச்சி தவிர்க்க வேண்டும். நிச்சயமாக மது அருந்தக் கூடாது.
மாதத்திற்கு இரண்டு பிரதோசங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தின் முன் பகுதியில் டிசம்பர் 5 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திரயோதசி திதி தினத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது..
பிரதோஷ தினத்தில் தான் ஈசன், ஆலகால விஷத்தை உண்டு இந்த அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகிறது. இதுவே திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் அது சனி மகா பிரதோஷமாக மேலும் சிறப்படைகிறது. பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 வரை சிவாலயத்தில் வலம் வந்து தரிசித்தால் பல்வேறு புண்ணியங்கள் செய்த பலன் கிடைக்கும். வசதிபடைத்தவர்கள் நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை செய்வது நல்லது.
பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் காண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு. சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனி மகா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.