இந்த 3 பொருளே போதும்! கண் திருஷ்டியில் இருந்து ஈசியா தப்பிக்கலாம்!?
Evil eye : கண் திருஷ்டியில் இருந்து தப்பிப்பதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் என நம்பப்படுகிறது

ஒருவரின் வளர்ச்சியை பார்த்து அவரை பிடிக்காதவர்கள் பொறாமைப்படுவது என்பது எங்கும் நிகழக்கூடிய ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு நம் வளர்ச்சியை பார்த்து பலரும் பொறாமைப்படுவதையும், நாம் வளர்ச்சியடையக்கூடாது என்று கருதுவதையும் நமக்கு கண் திருஷ்டி என்று கூறுவார்கள்.
கண் திருஷ்டி நீங்க வேண்டுமா?
இந்த நிலையில், இதுபோன்ற கண்திருஷ்டி நீங்க சில எளிய பரிகாரங்களை வீட்டிலேயே செய்யலாம் என்று கூறப்படுகிறது. கண்திருஷ்டி நீங்க வீட்டிலேயே பரிகாரம் செய்வது எப்படி? என்பதை விரிவாக காணலாம். இதற்கு வீட்டில் உள்ள கடுகு, மிளகு மற்றும் எலுமிச்சம்பழத்தை எடுத்துக்கொள்ளவும். இதற்கு நல்லெண்ணெய்யும் தேவைப்படும்.
முதலில், வீட்டில் உள்ள சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில், கடுகை முக்கால் பங்கு போட்டுக் கொள்ளவும். இப்போது, அதில் 10 மிளகை சேர்க்கவும். இப்போது, அதில் 1 எலுமிச்சம் பழம் போடவும். இப்போது, அந்த கிண்ணத்தை வீட்டில் அனைவரும் பார்க்கும்படி வைக்கவேண்டும் என கருதப்படுகிறது
இப்படி செய்யணும்:
இந்த கிண்ணத்தை வீட்டில் வைத்த ஒரு நாள் கழித்து அதற்கு அடுத்த நாள், அதாவது திங்கள்கிழமை வைக்கிறீர்கள் என்றால் புதன் கிழமை இப்போது கிண்ணத்தில் உள்ள எலுமிச்சம்பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதை இரண்டாக வெட்டி வலது, இடது என இரண்டு புறமும் தூக்கி வீசவும்.
பின்னர், கடுகு மற்றும் மிளகை ஒரு வெள்ளை நிற கதர் துணியில் போட்டு நன்றாக முடிச்சு போட்டுக் கொள்ளவும். இதை இப்போது வீட்டு வாசலில் வைக்கவும். இதில் நல்லெண்ணெய் ஊற்றி அதை எறிய விட வேண்டும். அப்போது, மிளகும், கடும் நன்றாக பொரியும். அவ்வாறு பொரியும்போது நம் வளர்ச்சி பிடிக்காதவர்களின் கண் திருஷ்டியும் பொரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
கண் திருஷ்டி போன்றவை இருந்தாலும் நாம் நம் உழைப்பின்போதும், இறைவன் மீதும் நம்பிக்கை வைத்து நமது செயலில் கவனம் செலுத்தி, முயற்சிப்பதே பிரதானம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: February 2024 Rasi Palan: 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் லீப் வருட பிப்ரவரி! 12 ராசிக்கும் என்ன பலன்கள்?
மேலும் படிக்க: Thaipusam 2024: தஞ்சை அறுபடை வீடு முருகன் கோயில்களில் தைப்பூச விழா சிறப்பு வழிபாடு: காவடி எடுத்து வந்த பக்தர்கள்





















