மேலும் அறிய

February 2024 Rasi Palan: 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் லீப் வருட பிப்ரவரி! 12 ராசிக்கும் என்ன பலன்கள்?

February 2024 Rasi Palan in Tamil: இந்த பிப்ரவரி மாதத்தில் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

February Month Rasi Palan 2024 in Tamil: 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கும் லீப் ஆண்டாக இந்த ஆண்டு பிறந்துள்ளது. இதனால், இந்த பிப்ரவரி 29ம் தேதி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்த பிப்ரவரி மாதம் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகிறது என்பதை கீழே காணலாம்.

மேஷ ராசி:

மேஷ ராசி வாசகர்களே  பிப்ரவரி மாதத்தில் பல ஏற்றமான பலன்கள் உங்களுக்கு நடைபெறப் போகிறது. குறிப்பாக செவ்வாயின் பெயர்ச்சி  உங்களுடைய ராசிக்கு பலம் சேர்க்கப் போகிறது. உங்கள் ராசி அதிபதி செவ்வாய்  பத்தாம் பாவத்தில் உச்சம் பெறுவது தொழில் ரீதியான வெற்றிகளையும், நினைத்த காரியம் நிறைவேற்றும் சக்தியையும் கொண்டு  வரும்.

ரிஷப ராசி :

ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பல கிரகங்கள் பிப்ரவரி மாதம் அமர்கின்றன.  நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த விஷயங்கள், உங்களுக்கு சாதகமாக முடியும்.  வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.  கோர்ட் கேஸ் என்று இழுத்து அடித்துக் கொண்டிருந்த காரியங்கள்  சாதகமாக  அமையும்.  மொத்தத்தில் பிப்ரவரி மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாகவே அமையப் போகிறது.

மிதுன ராசி :

மிதுன ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  ஏற்கனவே லாப ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்து உங்களுக்கு யோகங்களை கொண்டு வரப் போகிறார்.  அப்போது வீட்டில் ராகு இருக்கிறபடியால், ஒரு வேலைக்கு இரண்டு வேலை பார்க்க வேண்டி வரும்.  அலைச்சல் கூடினாலும் ஆதாயம் உண்டு.  செவ்வாய் ராசிக்கு எட்டாம் பாவத்தில் உச்சம் பெறுவதால்  எதிர்பாராத தன வரவு உண்டு.  வழக்கில் வெற்றி நிச்சயம்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.  மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாகவே அமையப் போகிறது.

கடக ராசி :

கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பிப்ரவரி மாதம்  நினைத்தது நடக்கும் மாதமாகத்தான் இருக்கும். ராசிக்கு ஐந்தாம் அதிபதி பத்தாம் அதிபதி ஏழில் அமர்ந்து உச்சம் பெறுகிறார்.  கேந்திர ஸ்தானங்களில் அதிபதிகள் திரிகோண ஸ்தானங்களில் அதிபதிகள் ஆட்சி உச்சம் பெறும்போது,  ஜாதகர் மிகப்பெரிய யோகத்தை அனுபவிப்பார் என்று சாஸ்திரம் கூறுகிறது.  அப்படிப்பட்ட சூழலில் ஐந்தாம் அதிபதி  பத்தாம் அதிபதி ஏழாம் வீடான  கேந்திரத்தில் உச்சம் பெறுவது, ஜாதகரை வலிமையானவராக மாற்றும்.  வாழ்க்கையில் எந்த சங்கடங்கள் வந்தாலும் அதை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் திறக்கும்.  காதல் விவகாரங்கள் திருமணங்களில் முடியும். நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்திருந்த கடக ராசி வாசகர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.  வருகின்ற பிப்ரவரி மாதம் உங்களுக்கு ஒரு சுப மாதமாகவே அமையப் போகிறது.

சிம்ம ராசி :

சிம்ம ராசி வாசகர்களே, அரசு வேலைக்காக தேர்வு எழுதி காத்துக் கொண்டிருக்கும் பலருக்கு அரசு வேலை நிச்சயமாக கிடைக்கும்.  யாருடைய ஜாதகத்தில்  செவ்வாய் பலம் பெற்று இருக்கிறாரோ அந்த சிம்ம ராசி வாசகர்களுக்கு கோச்சாரத்திலும் சிம்மம் ஆறாம் வீட்டில் பலம் பெற்று திகழ்வதால்,  வாழ்க்கைத் துணையின் ஆதரவு பெருகும். சமுதாயத்தில் மரியாதை உயரும்.  உங்களுக்கென்று ஒரு  தனி வழி உருவாக்கி பயணம் செய்ய ஆரம்பிப்பீர்கள்.  நண்பர்களிடத்திலோ வாழ்க்கைத் துணை இடத்திலோ பேசும் பொழுது வார்த்தையில் சற்று கவனமாக இருங்கள்.  சின்ன ஒரு விஷயம் கூட தீப்பொறியாக மாறி தீப்பிழம்பாக  பிரச்சினையை பெரிதாக முடியும்.  பிப்ரவரி மாதம் உங்களுக்கு பகையை வெல்லக்கூடிய மாதமாக இருக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்.

கன்னி ராசி :

கன்னி ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் பாவத்தில்  செவ்வாய் உச்சம் பெறுகிறார்.  மூன்றாம் அதிபதி எட்டாம் அதிபதி ஐந்தாம் பாவத்தில் உச்சம் பெறுவது,  உங்களுடைய சொந்த ஊரில் இருக்கக்கூடிய விசேஷங்களுக்கு கலந்து கொள்ள போகிறீர்கள்.  நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் சுலபமாக முடியும்.  எதிர்பாராத தன வரவு உண்டு.  அதிர்ஷ்டங்கள் கை கூடும்.  வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து  நல்ல காரியங்களுக்கான அடித்தளத்தை பிப்ரவரி மாதத்தில் இடப் போகிறீர்கள்.  வாழ்த்துக்கள் வணக்கம்.

துலாம் ராசி :

துலாம் ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  ஏற்கனவே ஏழாம் பாவத்தில் இருக்கும் குரு பகவான் நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கப் போகிறார்.  திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும்.  திருமணம் ஆனவர்களுக்கு வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும்.  உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் தேடி வந்து பேசுவார்கள்.  பகைவர்கள் நண்பர்கள் ஆவார்கள். பொலிவு கூடும்.  சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும்.  புதிதாக வாகனம் வாங்க வேண்டும் என்று  எண்ணியிருந்தவர்கள் அல்லவா? அதற்கான  அஸ்திவாரத்தை போடுவதற்கான நேரம் இது.  வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்.

விருச்சிக ராசி :

விருச்சிக ராசி வாசகர்களே  பிப்ரவரி மாதத்தில் முயற்சி ஸ்தானத்தில், வெற்றி ஸ்தானத்தில் ராசி அதிபதி அமர்ந்து உச்சம் பெறுகிறார்.  நீண்ட நாட்களாக தள்ளிப்போன நல்ல காரியங்கள் உங்கள் கைகளை தேடி வரும் .  இளைய சகோதரரின் ஆதரவு கிடைக்கும்.  நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள்.  வழக்குகளில் வெற்றி பெற்ற போகிறது.  எதையாவது சாதிக்க வேண்டும் என்று  எண்ணியிருக்கும் உங்களுக்கு சாதனை படைக்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை.  மூன்று நான்கு ஆகிய பாவங்களை நல்ல கிரகங்கள் ஆக்கிரமிப்பதாக  வருகின்ற பிப்ரவரி மாதம் உங்களுக்கு ஏற்றமான மாதமே.

தனுசு ராசி :

தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டு, மூன்று, ஐந்து என்று வரிசையாக இரங்கல் நல்ல நிலைமையில் அமர்ந்திருப்பதால்,  இனிய காரியங்கள் அத்தனையும் நிறைவேறும். பொலிவு கூடும் சமுதாயத்தில் மரியாதை உயரும்.  உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி சென்றவர்கள் வேண்டும் என்று பேச வருவார்கள்.  உங்களுடைய வாக்கு புனிதமாகும்.  நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் அடுத்தவர்களால்  பாராட்டப்படும்.  புத்திர பாக்கியம் கிடைக்கும். நீண்டதொரு பிரயாணம் மேற்கொள்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிட்டும்.

மகர ராசி :

மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு லாபாதிபதி செவ்வாய் லக்னத்திலேயே அமர்ந்து உச்சம் பெறுகிறார். நீங்கள் என்ன காரியம் நினைக்கிறீர்களோ? அதை இறைவன் செய்து கொடுப்பார்.  மே மாதத்திற்குள் இட மாற்றமோ அல்லது ஒரு சிறிய அளவிலான மாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு .  சனிக்கிழமை தோறும்  சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.

கும்ப ராசி :

கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சனி பகவான் அமர்ந்து ஜென்ம சனி ஆகி போகிறார். மூன்றாம் வீட்டில் இருக்கும் குரு பகவான் ஏழாம் வீட்டை பார்வையிடுவதால் நண்பர்களிடத்தில் சற்று கவனமாக இருங்கள். இருப்பினும் அனைவரும் உங்களுக்கு  சாதகமாகவே நடந்து கொள்வார்கள்.  ஜென்ம சனி ஆதிக்கத்தில் இருக்கும் உங்களுக்கு  அவ்வப்போது மற்ற கிரங்களால் நல்ல விஷயங்களை நடைபெறும்.  சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள் சங்கடங்கள் தீரும்.

மீன ராசி :

மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டாம் அதிபதி 9ஆம் அதிபதி லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். அப்படி என்றால் பிப்ரவரி மாதம் உங்களுக்கு ஒரு ஜாக்பாட் மாதமே.  மீன ராசிக்கு 11 ஆம் வீட்டில் பல கிரகங்கள் வந்து அமருகின்றன. கேட்டதும் கிடைக்கும், கேட்காததும் கிடைக்கும்.  ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கு நெய் தீபம் போட்டு வாருங்கள். சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பிறக்கும்.  மீன ராசிக்காரர்கள் புதிய தொழில் தொடங்கலாம் அல்லது வேறு வேலைக்கு சென்று அதன் மூலம் அதிக இலாபத்தை சம்பாதிக்கலாம்.  ஏழரை சனியின் ஆதிக்கம் உங்களுக்கு இருந்தாலும் மீன ராசிக்கு சனி பகவான் லாபாதிபதியாகவும் வருவதால் அவ்வளவு பெரிய கெடுதல்களை செய்வதில்லை.  வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் கிடைக்கட்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Embed widget