Dream Prediction : முத்தம் கொடுப்பதுபோல் கனவு வருகிறதா? கனவு சாஸ்திரம் இப்படி சொல்லுதாம் மக்களே..
நிஜ வாழ்க்கையில் மிகவும் நேசிக்கும் ஒருவரைக் கனவில் நீங்கள் காணும்போது நீண்ட காலமாக நீங்கள் நினைத்துக்கொண்டிருந்த ஒரு வாய்ப்பை விரைவில் பெறப்போகிறீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் முத்தம் கொடுப்பது போல் கனவு காண்கிறீர்கள் என்றால், உங்களது வாழ்வில் பல புதிய விஷயங்களைப் பெறப்போகிறீர்கள் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.
நம்முடைய ஆழ்ந்த தூக்கத்தில் நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் பல அர்த்தங்கள் உள்ளதாக கனவு சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக நள்ளிரவு 1 மணிக்கு மேல் கனவு கண்டால், அதன் பலம் ஒரு ஆண்டு கழித்துக் கிடைக்கும் எனவும், நள்ளிரவு 2 மணிக்கு மேல் கனவு கண்டால் அதன் பலன் 3 மாதத்தில் ஏற்படும் ஆனால் அதிகாலையில் கனவு கண்டால் நிஜத்தில் பலித்துவிடும் எனவும் கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் எனக்கூறப்படும் நிலையில், கனவில் முத்தமிட்டால் என்னென்ன விஷயங்கள் நடக்கிறது என்று நம்பப்படுகிறது என இங்கே தெரிந்துகொள்வோம்.
உதடுகளில் முத்தமிடுவது: உங்களது கனவில் உதடுகளில் முத்தமிடுவது போன்று கனவு ஏற்பட்டால், அது நற்பலன்களை உங்களுக்கு அளிக்கும். அதாவது உங்களது கனவால் உங்கள் நிஜ வாழ்க்கையில் புதிய உறவு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கும். இதேப்போன்று தொடர்ந்து அதே கனவு வருகிறது என்றால், நீங்கள் நீண்ட காலமாக வாங்க நினைத்த பொருள், வீடு, மனை வாங்கும் ஆசை நிறைவேறும் அல்லது உங்களது வாழ்வில் புதிய உறவுகள் வர வாய்ப்புள்ளது என நம்பப்படுகிறது
மற்றவரின் காதலன் அல்லது காதலிக்கு முத்தமிடுவது:
உங்களது கனவில் நீங்கள் மற்றவரின் காதலன் அல்லது காதலியை முத்தமிடுவது போன்ற கனவு வரும் பட்சத்தில், நீங்கள் உங்களது நிஜ வாழ்க்கையிலும் புதிய உறவை நீங்கள் உருவாக்க நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். இருப்பினும் நீங்கள் இதனை அடிக்கடி நினைத்து உங்களின் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள நினைக்காதீர்கள் என்றும் கனவு சாஸ்திரம் கூறுகிறது என நம்பப்படுகிறது
நீங்கள் விரும்பாத ஒருவரை முத்தமிடுதல்:
உங்களுக்கு பிடிக்காத ஒருவரை நீங்கள் முத்தமிடுவது போல கனவு கண்டால், இனி வரும் காலங்களில் நீங்கள் செய்ய விரும்பாத இதுப்போன்ற சில வேலைகளை நீங்கள் கட்டாயத்தின் பேரில் செய்ய வேண்டியிருக்கும். இதுப்போன்று நீங்கள் கனவு கண்டால் நிஜ வாழ்க்கையிலும் கொஞ்சம் கவனமாக இருந்துக்கொள்ளுங்கள் எனக் கூறப்படுகிறது என நம்பப்படுகிறது
பிரஞ்சு முத்தம்:
உங்களது கனவில் உதட்டோடு உதடு வைத்து பிரஞ்சு முத்தமிடுவது போன்ற கனவு வந்தால், நிஜ வாழ்க்கையில் நீங்கள் உங்கள் உணர்வுகளை இன்னும் நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும் என்று அர்த்தம். இதோடு உங்களது வாழ்வில் ஒழுக்கமான வாழ்க்கை வாழவும், உங்களது உறவுகளுக்கு நீங்கள் அதிகம் முக்கியத்துவம் காட்ட வேண்டும். ஒருவேளை நீங்கள் உங்களது உணர்வுகளை புரிந்துக்கொள்ளாமல் போக நேரிட்டால், அத்தகைய சூழலில் நீங்கள் உங்களது மனதில் உள்ளதை வெளிப்படையாக மனக்குறையை அவர்களுக்கு தெரியப்படுத்துவது நல்லது என நம்பப்படுகிறது
கனவில் பிடித்த நபரைப்பார்த்தல்:
நிஜ வாழ்க்கையில் மிகவும் நேசிக்கும் ஒருவரைக் கனவில் நீங்கள் காணும் போது நீண்ட காலமாக நீங்கள் நினைத்துக்கொண்டிருந்த ஒரு வாய்ப்பை விரைவில் பெறப்போகிறீர்கள் என்று அர்த்தம். இதோடு உங்களின் நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பொன்னான வாய்ப்பு விரைவில் உங்களுக்கு கைகளில் வரும் எனவும் கூறப்படுகிறது என நம்பப்படுகிறது