மேலும் அறிய

Astrology: உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு வரும் ராகு பகவான்! - மற்ற ராசிகளுக்கு நடக்கப்போவது என்ன?

உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு ராகு பகவான் வருவதால் 12 ராசிகளுக்கும்  ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி என்ன செய்யப் போகிறது என்பதை காணலாம்.

மேஷ ராசி:

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே,  உங்களுடைய ராசிக்கு ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில்  பயணிக்கும் போது  தொழில் முன்னேற்றம் ஏற்படும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். நோய்வாய் பட்டு இருந்த  அன்பர்களுக்கு நோயிலிருந்து விடுபடக்கூடிய காலகட்டம்.  குறிப்பாக ராகு சனியின் நட்சத்திரத்தில் பிரயாணம் செய்யும் போது அந்த சனி பகவான் உங்கள் ராசிக்கு வக்கிரம் பெற்றிருப்பதால், சிறப்பான பலன்களை வாரி வழங்கும். அக்கரம் பெற்ற கிரகத்தோடு வக்கிரம் பெற்ற கிரகத்தில் நின்ற நட்சத்திரமும் சேர்ந்து வேலை செய்தால்  இரண்டு மடங்காத சக்திகள் அதிகரிக்கும். 

ரிஷப ராசி:

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ராகு ஏற்கனவே பதினொன்றாம் வீட்டிலிருந்து பலவிதமான முன்னேற்றங்களை கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் ராகு சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரயாணம் செய்யும் போது  நீண்ட தூர பிராயணங்களில் மூலம் ஆதாயத்தை கொண்டு வந்து கொடுப்பார். பங்கு சந்தை போன்றவற்றில் வெற்றியை தேடி தருவார் . வீட்டில் சுப காரிய நிகழ்வுகளை நடந்தேறச் செய்வார்.   அயல்நாடு அயல் தேசம் போன்றவற்றை சாதகமாக செய்து கொடுப்பார். தந்தையின் உடல்நலம் ஆரோக்கியமடையும்.   சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்பாக மாறப்போகிறீர்கள்.லாப ஸ்தானத்தில் இருக்கும் ராகு உங்களுக்கு 18 மாதங்களையும் ஜெயமாகத்தான் கொண்டு செல்ல இருக்கிறார்.

மிதுன ராசி :

அன்பான மிதுன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகு பகவான் இதனால் வரையில் மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். தற்போது மீன ராசியில் இருக்கக்கூடிய உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அதாவது சனியின் நட்சத்திரத்தில் அவர் பிரயாணம் செய்யும் போது.  சற்று ஏற்ற இறக்கமான பலன்களை கொண்டு வந்தாலும் இறுதியில் உங்களுக்கு வெற்றியை தரப் போகிறார்.

மிதுன ராசியை பொறுத்தவரை எதிலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது காரணம் மீண்டும் அஷ்டம சனியின் பாதிப்பு உங்களை வந்து அடையப்போகிறது கும்ப ராசியில் வக்கிரம் பெற்றிருக்கும் சனி பகவான் எட்டாம் பாவத்தை நோக்கி பிரயாணம் செய்வதால் ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாக இரண்டு முறை யோசித்து செய்வது நல்லது.  மற்றபடி திடீர் தன வரவையும் அதிர்ஷ்டங்களையும் கொண்டு வந்து கொடுப்பார் சரி.  ஒரு ஊரில் இருப்பவர்களுக்கு வேறு ஊரில் நல்ல வேலை கிடைத்து இடமாற்றம் உண்டாகும்.   கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.   கடன்கள் அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

சிம்ம ராசி :

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகு இதனால் வருகின்ற ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். தற்போது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் போது ஆறாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டு அதிபதி சனி ஆகி அவர் எட்டாம் வீட்டில் ராகுவோடு சேரும்போது கடல்கள் முழுவதுமாக அடையும். மலையளவு கடன் இருந்தாலும் அது கடுகு அளவு சிறுத்துப் போகும் படி செய்வார். 

அப்படியானால் தன வரவு தாராளமாக தான் இருக்கும். ஏற்கனவே பத்தாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து பதவிக்கு சற்று ஆபத்தான நிலையை கொண்டு வந்தாலும் தற்போது இருக்கும் ராகுவின் கிரக சூழ்நிலையா உங்களுக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டு விடாது. தொழில் முன்னேற்றம் முதலீட்டில் வெற்றி போன்றவை கிடைக்கும். குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

 கன்னி ராசி:

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ராகு ஏழாம் வீட்டில் அதாவது களத்திர ஸ்தானம் என்று கூறக்கூடிய பாவத்தில் அமர்ந்து மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் சற்று ஏற்ற இறக்கமான பலன்களை கொண்டு வந்து கொடுத்திருப்பார்.  ஆனால் தற்போது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் வீட்டில் சுப காரிய நிகழ்வுகளை கடந்துறச் செய்வார்.

குறிப்பாக பூர்வீக நிலம் வாங்க வேண்டும் என்று இருப்பவர்களுக்கு தற்போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் ஐந்தாம் அதிபதி சனி ஆகிய அவர் வக்கிரம் பெற்று ஐந்தாம் பாவத்தை நோக்கி பிரயாணிக்கும் இந்த காலகட்டத்தில் ஏழாம் வீட்டில் இருக்கும் ராகு சனியும் நட்சத்திரத்தை வாங்கினால் நிச்சயமாக பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும் வில்லங்கங்கள் அகன்று கோர்ட்டு கேஸ் வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

துலாம் ராசி:

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே. உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகு பகவான் வந்து இதனால் வரையில் மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். தற்போது மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது நான்காம் அதிபதியும் ஐந்தாம் அதிபதிவான சனி பகவானின் நட்சத்திரத்தில் ராகு அவரது நிச்சயமாக ஒரு இடத்தில் கடன் வாங்கி மற்றொரு இடத்தில் மிகப்பெரிய சுப காரிய நிகழ்வுகளை நீங்கள் நடத்துவீர்கள்.   குறிப்பாக இடம் வாகனம் வாங்குவதற்காக நீங்கள் கடன் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம்.   வயது இருதயம் தொடர்பான நோய்கள் உங்களுக்கு குணமாகும்.   ஆறாம் வீட்டில் ராகு அமர்ந்து எதிரிகளே இல்லாத சூழ்நிலையை உருவாக்குவார். 

விருச்சக ராசி:

அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே, ஏற்கனவே குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் நிச்சயமாக தேக ஆரோக்கியம் பொலிவு கூறி இருக்கும் அதோடு கூட ராகு பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்து புத்திர பேறு. குழந்தைகள் வழியில் சிறு கஷ்டங்கள் போன்றவை கொண்டு வந்து சேர்த்திருக்கலாம்   ஆனால் தற்போது ராகு பகவான்   சளியின் பாதத்தில் பயணம் செய்யப் போகிறார் உங்களுக்கு மூன்றாம் அதிபதியும் நான்காம் அதிபதியுமான சனி பகவான் நிச்சயமாக நன்மைகளையே கொடுக்க கடமைப்பட்டவன் குறிப்பாக இடம் நிலம் வாகனம் போன்றவற்றால் மேன்மையான ஆதாயங்களையும் முயற்சிகளை வெற்றியையும் கொண்டு வந்த தரப் போகிறார். .  அதே போல் நீண்ட தூர பிராயணங்களை மேற்கொள்வீர்கள்.

 தனுசு ராசி:

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டின் அமர்ந்து சற்று ஓய்வெடுக்க தான் வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கினாலும் ஓய்வறியா உள்ளங்கள் போல நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள் அந்த ஓட்டத்துக்கு தற்போது தடை ஏற்படும் .   காரணம் நீங்கள் கேட்ட  பணம்  உங்களிடமே இருக்கும்.   உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வேலைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால் அந்த ஓட்டத்திற்கு தற்போது முடிவு ஏற்பட்டு நீங்கள் உள்ளூரிலே இருக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் ஜூலை எட்டாம் தேதிக்கு பிறகு  குரு பகவான் சளியும் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் தனுசு ராசிக்கு இரண்டாம் அதிபதியும் மூன்றாம் அதிபதியுமான சனி பகவான் நான்காம் வீட்டிற்கும் ராகு இயக்கி அதன் மூலம் வெளியூரில் இருப்பவர்கள் எல்லாம் உள்ளூருக்கு வரப் போகிறார்கள் வெளிநாட்டில் இருக்கும் தனுசு ராசிகள் உள்நாட்டுக்கு வரப்போகிறார்கள் உங்களுக்கு உள்ளூரிலேயே நல்ல வேலை கிடைத்து நல்ல வருமானத்தோடு நீங்கள் செட்டில் ஆவீர்கள்.

நீண்ட நாட்களாக. குழந்தை பாக்கியம் இல்லாமல் தள்ளிப்போனவர்களுக்கு தற்போது அதற்கான வாய்ப்புகள் கிட்ட போகிறது ஐந்தாம் வீட்டிற்கு 12 ஆம் வீட்டில் ராகு அமர்ந்து அவர் ஐந்தாம் வீட்டிற்கு பதினொன்றாம் அதிபதியின் நட்சத்திர சாராம் வாங்கும் போது வீட்டில் குழந்தை செல்வம் நிச்சயமாக உங்களுக்கு உண்டு. பிள்ளைகளால் பெருமையும் ஆதாயமும் அடையப் போகிறீர்கள் பூர்விக நிலம் கைக்கு வரும் வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

மகர ராசி:

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ராகு மூன்றாம் வீட்டில் அமர்ந்து எதை செய்தாலும் சற்று தாமதமான பழங்களை கொண்டு வந்து கொடுத்திருப்பார் இதுதான் வரையில் மீன ராசியில் புதன் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்த ராகு பகவான் தற்போது ஜூலை எட்டாம் தேதிக்கு பிறகு உங்களுடைய சொந்த ஆசை அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் ராகு சஞ்சாரம் செய்யும் போது இதனால் வரையில் எட்டாம் கிளியாக இருந்த பல விஷயங்கள் உங்களுக்கு எட்டுகின்ற  சம்பவங்களாக நடைபெறப்போகிறது. .  குறிப்பாக தொழில் மாற வேண்டும் வியாபாரத்தில் புது முதலீடுகளை கொண்டு வர வேண்டும் என்று காத்திருந்த உங்களுக்கு அந்த சம்பவங்கள் நிறைவேற போகிறது.   மகர ராசியை பொறுத்தவரை மூன்றாம் இடத்தில் ராகு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றாலும் மகர ராசிக்கு ஆறாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியின் சாரத்தை   வாங்கியதால் பெரிய அளவிற்கு நன்மைகளை செய்ய முடியாமல் போனது ஆனால் தற்போது ராகு சனியும் சாரத்தை நன்றாக சம்பாதிக்கக்கூடிய பணத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் சொல்வாக்கு செல்வாக்கை அதிகரிக்க கூடிய செயல்களையும் ராகு ஏற்படுத்தப் போகிறார்.

கும்ப ராசி:

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே, உங்களுடைய குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகளை ஏற்படுத்தினாலும் பெரிய அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார் ராகு இதனால் வரையில் மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தா தற்போது மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் போது ராசி அதிபதி சனி பகவான் உங்களுடைய சாரத்திலேயே ராகு பகவான் பயணிக்கும் போது இதுதான் வரையில் உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

ஒரு இடத்தில் நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தால் வேறு ஒரு இடத்துக்கு இடமாற்றம் ஏற்படும். உள்ளூரில் இருப்பவர்கள் வெளியூரில் போவதற்கான வாய்ப்புகள் உண்டு வெளியூரில் இருப்பவர்கள் உள்ளூர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு குடும்பத்தில் சிறிய விஷயத்தை கூட பெரிதாக்க வேண்டாம். கோர்ட்டு கேஸ் வம்பு வழக்குகள் இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலையாக கூடிய காலகட்டம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீன ராசி:

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே, இது நாள் வரையில் உங்கள் ராசியிலேயே ராகு பகவான் சஞ்சாரம் செய்து ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது  என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பார் காரணம் என்னவென்றால்.   உங்களுடைய நான்காம் அதிபதியும் ஏழாம் அதிபதியுமான புதன் சாரத்தில் ராகு இதனால் வரையில் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தா நான்காம் இடம் என்பது  நீங்கள் இருக்கின்ற இடம் ஏழாம் இடம் என்பது நீங்கள் சந்திக்கும் நபர் ராகு லக்னத்திலேயே அமர்ந்து நீங்கள் இருக்கின்ற இடத்தை மாற்ற வேண்டும் பார்க்கின்ற நபர்களிடத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்து இருப்பார்.   அதற்கான சூழ்நிலையும் உங்களுக்கு உருவாகி இருக்கும்.   ஆனால் தற்போது நிலைமையே வேறு ராகு உங்களுடைய 11 ஆம் அதிபதியும் 12 ஆம் அதிபதியுமான சனியின் சாரத்தின் சஞ்சாரம் செய்யப் போகிறார் நீண்ட தூர பிரயாணங்களின் மூலமாக ஆதாயம் அடையப் போகிறீர்கள் இடம் மாற்றம் தொழில் மாற்றம் நிச்சயமாக உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.  

பதினொன்றாம் வீட்டு அதிபதி சனியின் சாரத்தை ராகு பகவான் எடுக்கும் பொழுது நிச்சயமாக லாபத்தை நோக்கித்தான் நீங்கள் பிரயாணம் செய்யப் போகிறீர்கள். ராகு என்பது தொழில்நுட்பத்தை குறிக்கும்  தற்போது இருக்கும் காலகட்டத்தில் ராகு தான் ஹீரோ என்று கூட வைத்துக் கொள்ளலாம் அப்படியான சூழலில் ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அமர்ந்து சனியின் சாரத்தை வாங்கும்போது விரயங்கள் சுப விரயங்களாக மாற்றப்படும்.   நீங்கள் ஒரு விஷயத்தை எதிர்பார்த்து இருந்தால் உங்களுக்கு நான்கு ஐந்து  விஷயமாக கூட நன்மையான காரியங்களாக கிடைக்க வாய்ப்பு உண்டு.   சனி  ஏற்கனவே வக்கிர நிலையில் 11-ம் வீட்டை நோக்கி பிரயாணம் செய்யும் இந்த காலத்தில் ராகு பகவானும் அந்த சனியின் சாரத்தை வாங்கும்போது இரட்டிப்பு லாபத்தை உங்களுக்கு கொண்டு வருவார் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Embed widget