மேலும் அறிய

விபத்து, எலும்பு முறிவு ஏற்படுவதற்கு ஜோதிடம் சொல்லும் காரணங்கள்! கட்டம் சொல்வது இதுதான்!

செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது நிற்கின்ற மற்றும் பார்க்கின்ற காலபுருஷ ராசி, ஆளும் லக்னப்படியான பாவத்தாலும் மற்றும் அக்கிரகங்கள் தங்களுக்குள் பார்வை செலுத்திக் கொள்வதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.

விபத்தை ஏற்படுத்தித் தரும் காரக கிரகங்கள் செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது என நான்கு ஆகும். இவர்கள் நிற்கின்ற மற்றும் பார்க்கின்ற காலபுருஷ ராசி ஆளும் லக்னப்படியான பாவத்தாலும் மற்றும் அக்கிரகங்கள் தங்களுக்குள் பார்வை செலுத்திக் கொள்வதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.  அதேபோல் பகை கிரகங்கள் சேர்ந்திருப்பதாலும் தங்களுக்குள் பார்த்துக் கொள்வதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. நான்கு ஆறு எட்டு பன்னிரண்டுக்கு உரியவர்கள் தங்களுக்குள் பார்த்துக் கொண்டாலோ அல்லது இணைந்து இருந்தாலோ விபத்து ஏற்படுகிறது.

பாதக தசா புத்தி:

விபத்தின் போது மாறாக பாதக தசா புத்தி நடக்காத போது விபத்தால் பெரிய கண்டங்கள் நடக்காது.  மாறக பாதக தசாபுத்தி நடந்தால் மரணத்திற்கு சமமான ஊனமோ கண்டமோ, மரணமோ கூட நடக்க வாய்ப்புண்டு.  செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்து சனியை பார்த்தால் அல்லது சூரியனை பார்த்தால்  விபத்துக்கள் நேரிட்டு அறுவை சிகிச்சை வரை செல்கிறது.

செவ்வாய் சனி சேர்ந்த ராசியில் அல்லது  சேர்ந்து பார்த்த ராசியில் இக்கிரகங்களின் பார்வை பட்ட ராசியில் கோச்சாரத்தில் செவ்வாய் சனி ராகு கேது என்ற நால்வரில் இருவர் தொடர்பாவது இருந்தால்  இவையே விபத்து ஏற்படுவதற்கான கிரக அமைப்புகள் ஆகும்.  மேற்கண்ட விதிகளின்படி செவ்வாய் சனி, ராகு கேது இவர்களால் விபத்து ஏற்படுத்தக்கூடிய  கிரகச் சேர்க்கை பார்வையை பல ஜாதகங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.  யானைக்கால் வியாதி ஒரு பண்டம் மேலே விழுவதால் ஏற்படும் காயம். சனி சந்திரன் சேர்க்கைக்கு கிணறு வெட்டும்போது ஏற்படும் காயம் சனி சுக்கிரன் சேர்க்கைக்கு வாகனம் மூலம் ஏற்படுத்தும் விபத்து சனி சுக்கிரன் செவ்வாய் சேர்க்கைக்கு ஒரு வாகனம் மேலே ஏறுவதால் ஏற்படுத்தும் விபத்து போன்றவை சுட்டிக்காட்டுகிறது.

காரக கிரகங்கள்:

சூரியன் எலும்பையும் எலும்பு மஜ்ஜைகளையும், சந்திரன் எலும்பில் இருக்கும் ரத்தம் உயிர்ப்பு தன்மையையும்,  செவ்வாய் எழும்பின் பலம் பலவீனத்தையும் உடலின் மொத்த கட்டமைப்பையும், புதன் நரம்புகளையும் தோலையும், சுக்கிரன் எலும்புகளின் வளர்ச்சியையும், சனி எலும்பின் பலவீனத்தையும், ராகு உருப்பு துண்டிப்பதையும் உடம்பில் உள்ள ஒரு உறுப்பு செயல் இழப்பதையும் கேது சிக்கலான நிலைக்கு உறுப்புகள் தள்ளப்படுவதையும் குறிக்கும் காரக கிரகங்களாகும்.

உடம்பில் ஒரு உறுப்பு செயல் இழத்தல், துண்டித்தல் காரணம் என்ன ?

ராசி அதிபதிகள் மற்றும் ராசியில் இருக்கும் கிரகங்கள் வெளி உறுப்பையும் நட்சத்திராதிபதிகள் உள் உறுப்புகளையும் குறிக்கின்றது.  இரண்டும் தொடர்பாகும் போது உள், வெளி என இரு உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.  சனி ராகு அல்லது கேது குறிக்கும் உறுப்பு செயல் இழக்கப் போவதையோ அல்லது உடலில் இருந்து பிரிவதையோ காட்டப் போகிறது.  மேலே சொன்ன கிரகங்களின் நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகம் இருக்கும் ராசி லக்னத்திற்கு எத்தனையாவது பாவமாக வருகிறது அந்த பாவகத்தின் காரக உறுப்பு செயலிழக்கும்.  அதேபோல அவர்களின் நட்சத்திரத்தில் கிரகம் இல்லாத போது அவர்கள் நின்ற பாவத்தின் காரக உறுப்பு துண்டிக்கப்படுகிறது அல்லது செயல் இழக்கிறது.

செயற்கை உறுப்புகளை பொருத்திக் கொள்ள ராகு அல்லது கேது ஒரு முக்கியமான காரக கிரகம் ஆகிறது. செயற்கை உறுப்புகளை உடம்பு ஏற்றுக்கொள்ள செவ்வாயும் குருவும் காரக கிரகம் ஆகிறது. செவ்வாய் குரு இவர்களின் பலம் அதிகமாக இருக்கும் போது உடம்பானது செயற்கை உறுப்புகளை ஏற்றுக் கொள்கிறது. இப்படியாக விபத்துகளை பற்றி அல்லது ஒரு உறுப்பு உங்களுக்கு செயல் இழப்பதை பற்றியோ அல்லது உறுப்பு துண்டிக்கப்படுவதை பற்றியோ நாம் கூற முடியும்.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (14-10-2026): மீனத்துக்கு வெற்றி.. கன்னிக்கு சிரமம்.. உங்க ராசிக்கு என்ன பலன்னு தெரிஞ்சுகோங்க!
Rasi Palan Today (14-10-2026): மீனத்துக்கு வெற்றி.. கன்னிக்கு சிரமம்.. உங்க ராசிக்கு என்ன பலன்னு தெரிஞ்சுகோங்க!
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (12-10-2026): இன்னைக்கு இந்த 2 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-10-2026): இன்னைக்கு இந்த 2 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Today (11-10-2026): நவராத்திரி முதல் நாள்.. கடகத்துக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு அதிர்ஷ்டமா?
Rasi Palan Today (11-10-2026): நவராத்திரி முதல் நாள்.. கடகத்துக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு அதிர்ஷ்டமா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
Embed widget