மேலும் அறிய

இன்றைய ராசிகளுக்கான துல்லியமான பலன்கள் (21-04-2021)

இன்றைய நாளில் எந்தெந்த ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன் என்பதை ஜோதிட நிபுணர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா கணித்துள்ளார்.

இன்றைய நாள் எப்படி?

ஏப்ரல் மாதம் புதன்கிழமை பிலவ வருடம் சித்திரை மாதம் 8-ந் தேதி கீழ்நோக்கு நாள் நவமி சித்தயோகம் கூடிய நாள். ஸ்ரீராமநவமி திருவையாறு சிவபெருமான் தன்னைத் தானே உயிர்த்தல், விருட்சப சேவை, உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி விமானத்தில் பவனி வரும் காட்சி, பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் என முக்கிய நிகழ்வுகளை உள்ளிடக்கியது. 

இன்றைய நல்ல நேரம்

காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை

மாலை 3 மணி முதல் 4 மணி வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

ராகு காலம்

நண்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை

மேஷம்

தனலாபம் கூடும். வணிக லாபம் கூடும். பொருள் ஆதாரம் சிறப்பாக இருக்கும். எந்த காரியத்தையும் விட்டுக்கொடுக்காமல் முன்னின்று நடத்துவீர்கள். வெற்றி வாய்ப்புகளை குவிக்க காத்திருக்கிறீர்கள். உடல்நலம் சீராகும். மனக் குழப்பங்கள் குறையும். தங்கம், வெள்ளி வியாபாரிகள் கூடுதல் முன்னேற்றம் காணலாம். இரும்பு, எஃகு வியாபாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். சிறு மற்றும் குறு தொழில் செய்வோர் கூடுதல் முன்னேற்றம் காணலாம். 

ரிஷபம் 

ஆர்வம் கூடும். தொழில் ஆர்வம், கலை ஆர்வம் சிறப்பாக அமைய காத்திருக்கிறது. தூர தேசப்பயணங்களை குறைத்துக் கொள்ளவும். விருந்து, விழாக்களை குறைத்துக் கொள்ளவும். எந்த காரியத்தையும் அவசரப்படாமல் நிதானமாக செய்யவும். காலையில் மனக்கஷ்டம் ஏற்பட்டால் மாலையில் முன்னேற்றம் கிடைக்கலாம். மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். உற்றார். சுற்றத்தார் உதவிகரமாக இருப்பார்கள். அமைதியுடன் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் காணலாம். 

மிதுனம்

முயற்சிகள் சாத்தியமாகும், காரியங்கள் கைகூடும்.  எந்த காரியத்தையும் சிறப்பாக செய்வீர்கள். முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள்.மனக்குழப்பத்தை தவிர்த்து திடமாக முடிவெடுப்பீர்கள். உங்களது திறமைகள் பாராட்டப்படும். பளிச்சிடும். புகழ், பெருமை, கவுரவம் கூடும். பட்டம், பதவிகள் பெறலாம். இழந்த பதவிகளை திரும்ப பெறலாம். அரசியல் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தகவல்கள் தனவரவு கூட்டும். காதல் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வழக்குகள் சாதகமாகும்.

கடகம்

காரிய தடங்கள் வருவது போன்று தோன்றினாலும் சுதாரித்துக் கொள்வீர்கள். நல்ல முன்னேற்றம் காணலாம். வெற்றி கைகூடும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்வீர்கள். முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள். மனக் குழப்பங்கள் குறையும். பயணங்களை குறைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மட்டும் சென்று வரவும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். பெற்றோர் வழியிலே இதுவரை இருந்த மனக்குழப்பம் மாறக் காத்திருக்கிறது.

சிம்மம்

எதிர்ப்புகள் வருவது போல தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். நல்ல முன்னேற்றம் காணலாம். காரிய தடங்கள் வருவது போல தோன்றினாலும் சுதாரித்துக் கொள்வீர்கள். அரசு வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். அரசியலில் இழந்த பதவிகளை மீண்டும் பெறப்போகிறீர்கள். பதவி உயர்வு, நல்ல முன்னேற்றம் காணலாம். அரசியல் ஆர்வம் கூடும். அணுகூலம் கூடும். வெற்றி காத்திருக்கிறது. வழக்குகள் சாதகமாகும். பெண்கள் வழியிலே கவனமாக பேசவும். யாருக்கும் பொறுப்பேற்று கொள்ள வேண்டாம். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மாணவர்கள் அன்போடும், பாசத்தோடும், பிரியத்தோடும் பழகவும். 

கன்னி

வரவுகளுக்கு பஞ்சமிருக்காது. அதே நேரத்தில் செலவுகளுக்கும் பஞ்சமிருக்காது. அலைச்சலும் கூடும். ஆதாயமும் கூடும். மனக்குழப்பங்கள் குறைய காத்திருக்கிறது. உடல்நலம் சீராகும். கவலைகள் மாறும். ஏதோ ஒரு உறுத்தல் மனதில் நின்றுகொண்டே இருக்கும். அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். காரியம் கைகூட காத்திருக்கிறது. உடல்நலம் அற்புதமாக மாறக் காத்திருக்கிறது. மருத்துவ செலவுகள் குறையும். உற்றார், பெற்றோர், சுற்றத்தார் உதவிகரமாக இருப்பார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். 

துலாம்

பொறுமை கூடும். பொறுமைதான் பெருமைகளை சேர்க்க காத்திருக்கிறது. அவசரப்படவோ, ஆவேசப்படவோ கூடாது. நிதானமாக செயல்பட்டால் காரியம் வெற்றி பெறும். சிறு, குறு தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். உற்பத்தி பொருட்களுக்கு சந்தையிலே நல்ல மதிப்பும், மரியாதையும், முன்பணமும் கிடைக்க காத்திருக்கிறது. தங்கம், வெள்ளி வியாபாரம் செய்வோர் விழிப்புடன் செயல்பட வேண்டும். 

விருச்சிகம் :

பரிசு, பாராட்டு கிடைக்க காத்திருக்கிறது. கவுரவம் கூட காத்திருக்கிறது. சமூக சேவைகளிலே சிறப்பாக செயல்படுவீர்கள். பொதுக்காரியங்களை சிறப்பாக முன்னின்று நடத்துவீர்கள். காரியம் கைகூடும். ஆன்மீக சிந்தனையும், ஆன்மீக நாட்டமும் கூடும். திருப்பணி வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். நட்பு வழியில் கூடுதல் கவனம் தேவை. 

தனுசு

பாசம், நேசம் கூடும். அன்புக்குரியவர்களின் சந்திப்பு நிகழும். பிரிந்தவர்கள் பிரியத்துடன் ஒன்று கூடலாம். அப்போது கோபப்படக்கூடாது. அப்போது பாசத்துடன் பேசவும். தொழில் வளம் கூடும். வியாபாரம் கூடும். வாடிக்கையாளர்களிடம் கோபமாகவோ, எரிச்சலாகவோ பேசக்கூடாது. போக்குவரத்திலே கவனம் தேவை. யாருக்கும் வாக்கு அளிக்க வேண்டாம். 

மகரம்

விருப்பங்கள் நிறைவேறும். சந்திப்புகள் சுகம் கூட்டும். பழைய நண்பர்களை சந்திக்கலாம். உடல்நலம் சீராகும். மனக்குழப்பங்கள் குறையும். தகவல்கள் தனவரவு கூட்டும். உடல்நலத்திலே நல்ல முன்னேற்றம் காணப்படும். வரவுகள் சாத்தியமாகும். வரன்கள் வரமாகும். 

கும்பம்

நன்மைகள் பலப்படும், புலப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்வீர்கள். பொறுமை மிகமிக அவசியம். எந்த காரியத்தையும் பொறுமையாக செய்தால் முன்னேற்றம் காணலாம். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். ரத்த அழுத்தம் சம்பந்தமான சிக்கல்கள் வரலாம். உடல்வலி ஏற்படலாம். உணவுக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். காதல் பிரச்சினைகள் சுமூகத்திற்கு வரும்.

மீனம்

காரியம் ஜெயம் கூடும். எந்த காரியத்தையும் நிதானமாக, பொறுமையாக செய்வீர்கள். அனைவரும் பாராட்டுவார்கள். உணவு தொடர்பான தொழில் செய்வோர் விழிப்புடன் செயல்பட வேண்டும். காய்கறி வியாபாரிகளுக்கு கூடுதல் கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது அதிக கவனம் தேவை.

இன்றைய நாள் அனைவருக்கும் இனிதாக வாழ்த்துக்கிறது ABP நாடு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget