மேலும் அறிய

முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாலும், முப்போகம் விளைந்த பூமியில் ஒருபோகம் மட்டுமே விளைகிறது.

முப்போகம் விளைந்த தூத்துக்குடி மாவட்டம் ஒருபோகம் விளைச்சலுக்கே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. முப்போகம் விளைந்த பூமியில், அவ்வப்போது விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் வடக்கே மானாவாரியும், தெற்கே வளமான ஆற்றுப்பாசனத்துடனும் விவசாயம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் தெற்கே வற்றாத ஜீவநதியான தாமிரபரணியும், வடக்கே வைப்பாறும் ஓடுகிறது. ஆனால் தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் நன்செய் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வந்தது. 

முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணைக்கட்டில் இருந்து மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வடகால், தென்கால் ஆகிய 4 கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களின் மொத்த நீளம் 78 கிலோ மீட்டர் ஆகும். இந்த கால்வாய்கள் மூலம் நேரடியாக 53 குளங்கள் நிரப்பப்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 651 குளங்கள் உள்ளன. அதே போன்று 22 ஆயிரத்து 549 கிணறுகள், ஆழ்துளை கிணறுகளும் விவசாயத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

இதனால் மாவட்டத்தில் நெல் சாகுபடி வழக்கமாக 14 ஆயிரத்து 386 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படும். கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 477 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 16 ஆயிரம் எக்டேர் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் பிசானம் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். 

முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

இந்த சூழ்நிலையில் வயல்வெளிகளுக்கு சீராக தண்ணீர் பாய்ந்து செல்வதற்கும், வயல்களில் இருந்து தண்ணீர் வடிந்து செல்லவும் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கால்வாய்கள் அனைத்தும் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் விவசாயிகள் ஒப்படி சங்கம் மூலம் வயல்களுக்கு நடுவே செல்லும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. தற்போது அந்த முறை பல இடங்களில் காணாமல் போய் இருக்கிறது. இதனால் அரசே நிதி ஒதுக்கி அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. 

முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரை சேர்ந்த விவசாயி தமிழ்மணி கூறும் போது, இந்த ஆண்டு விவசாய பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்கு வசதியாக ஏற்கனவே தனியார் பங்களிப்புடன் சில கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சிரமைக்கப்பட்டன. அதே நேரத்தில் மருதூர் கீழக்கால் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டும் பணி தொடங்கப்படவில்லை.

முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

வயல்களுக்கு இடையே செல்லும் வடிகால்கள், முன்பு ஒப்படி சங்கங்கள் மூலம் சீரமைக்கப்பட்டு வந்தன. இடையில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் கால்வாய்கள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு அந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் விவசாய சங்கத்தின் மூலம் மேற்கொள்ளும் பணிகளும் தொய்வை சந்தித்து உள்ளன. விவசாயிகளுக்கு, அவர்களின் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்கும் போது, இது போன்ற பணிகளை ஆர்வமுடன் மேற்கொள்வார்கள். தற்போது அந்த நிலை இல்லாததாலும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கலாம். அதே போன்று கால்வாய்கள் தற்காலிகமாக தூர்வாரும் பணிகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு உள்ளன. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.

முப்போகம் விளைந்த பூமி- ஒரு போகத்துக்கே தள்ளாடும் தூத்துக்குடி மாவட்டம்

விவசாய திட்டங்களுக்கு எம்.எல்.ஏ நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும். முன்பு வேளாண்மை துறை மூலம் கால்வாய்களின் கரைகள் காங்கிரீட்டால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. முறையாக தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைத்து பயன்படுத்தியதாலும், கால்வாய்கள் தூர்வாரப்பட்டதாலும் போதுமான தண்ணீர் கிடைத்தது. இதனால் முப்போகம் விளைந்தது. தற்போது இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டதாலும், தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாலும், முப்போகம் விளைந்த பூமியில் ஒருபோகம் மட்டுமே விளைகிறது என்றார்.

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் வெப்ப அலை: தாமத எச்சரிக்கை ஏன்? அரசுக்கு எம்.பி.யின் அவசர கோரிக்கை!
தமிழ்நாட்டில் வெப்ப அலை: தாமத எச்சரிக்கை ஏன்? அரசுக்கு எம்.பி.யின் அவசர கோரிக்கை!
விளைநிலத்திலேயே கரும்புகளை டிராக்டர் கொண்டு அழிக்கும் அவலநிலை - விழுப்புரம் விவசாயிகள் கண்ணீர் !
விளைநிலத்திலேயே கரும்புகளை டிராக்டர் கொண்டு அழிக்கும் அவலநிலை - விழுப்புரம் விவசாயிகள் கண்ணீர் !
டெல்டாவில் அடுத்த பேரழிவு? சம்பா சாகுபடியும் காலி... அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 உயரும் அபாயம்: அன்புமணி அதிரடி எச்சரிக்கை!
டெல்டாவில் அடுத்த பேரழிவு? சம்பா சாகுபடியும் காலி... அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 உயரும் அபாயம்: அன்புமணி அதிரடி எச்சரிக்கை!
சோளத்திற்கு மாறும் டெல்டா விவசாயிகள்! உடனடி வருமானம் தருவதால் புதிய நம்பிக்கை
சோளத்திற்கு மாறும் டெல்டா விவசாயிகள்! உடனடி வருமானம் தருவதால் புதிய நம்பிக்கை

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
Embed widget