மேலும் அறிய

Subsidy for setting up poultry farm : நாட்டுக்கோழி வளர்க்க ஆர்வமா..? அரசு தருகிறது மானியம் ..! முழு விவரத்தை தெரிந்து கொள்ளுங்க..!

Subsidy for setting up poultry farm : ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.  

நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான, (250 எண்ணிக்கை) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீதம் மானியம், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார். 

 நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம் ( Subsidy for setting up poultry farm )

கால்நடை பராமரிப்புத்துறை 2023-24ம் ஆண்டில் மானியக் கோரிக்கை அறிவிப்பு எண். 4-ன்படி  ஒவ்வொரு மாவட்டத்திலும் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில் முனைவோர் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முக்கிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்காணும் திட்டம் 2023 . 24 ஆம் ஆண்டில் அனைத்து (37) மாவட்டங்களிலும், குறிப்பாக  திட்டம் செயல்படுத்தப்படாத 27 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

மொத்த  செலவில்  50 சதவீதம் மானியம்

நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு  ( தீவனத்தட்டு  மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு ), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ( கோழி வளரும் வரை ) ஆகியவற்றிற்கான மொத்த  செலவில்  50 சதவீதம் மானியம் (ரூ.1,50,625)  மாநில அரசால் வழங்கப்படும் .

  • திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி   திரட்ட வேண்டும். 
  • ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.  
  • பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்.  இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். 

நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்

  • மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.  விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.  2022 -23ஆம் ஆண்டிற்கான  நாட்டுக்கோழி வளர்ப்பு  திட்டத்தின்  கீழ்  பயனாளிகள் பயனடைந்திருக்கக் கூடாது.
  • கட்டுமானப்பணிகள், தீவனம் (ம) உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும். 
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்தின் கீழ் , நாட்டுக்கோழி வளர்ப்பில்  திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில் முனைவோர் / பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் பயனாளிகளிடமிருந்து  ஆதார் அட்டை நகல்,  பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம் ) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி,  2022 -23ஆம் ஆண்டிற்கான  நாட்டுக்கோழி வளர்ப்பு  திட்டத்தின்  கீழ்   பயனடையவில்லை  என்பதற்கான சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

மாவட்டங்களிலிருந்து பெறப்படும் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளின் பட்டியலிலிருந்து, முன்னுரிமை அடிப்படையில் 100 பயனாளிகள்,  கால்நடை பராமரிப்பு  மற்றும்  மருத்துவப்பணிகள்  இயக்குநர்  அவர்களால் இறுதி செய்யப்படும் .மேற்படி பொருள் குறித்து பொதுமக்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
Rasipalan December 08: பேச்சுக்களை குறைங்க மகரம்; கும்பத்துக்கு வரவு: உங்க ராசி பலன்?
Rasipalan December 08: பேச்சுக்களை குறைங்க மகரம்; கும்பத்துக்கு வரவு: உங்க ராசி பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
உதயநிதி சினிமா செய்தி பார்க்கமாட்டாராம்... - பதிலடியால் திகைக்கும் துணை முதல்வர்! பதறும் திமுக!
Rasipalan December 08: பேச்சுக்களை குறைங்க மகரம்; கும்பத்துக்கு வரவு: உங்க ராசி பலன்?
Rasipalan December 08: பேச்சுக்களை குறைங்க மகரம்; கும்பத்துக்கு வரவு: உங்க ராசி பலன்?
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain: இன்று இரவு இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
Vijay Reactions: விஜய் பற்ற வைத்த நெருப்பு: கனிமொழி, உதயநிதி, திருமாவளவன், அதிமுக, டிடிவி கருத்துகள்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
Embed widget