மேலும் அறிய

பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிலாளர்கள்

பொங்கல் பரிசு தொகுப்பில் பனங்கிழங்கை வழங்க வேண்டும் என கடந்த ஆண்டே கோரிக்கை விடுத்தோம். எங்களது கோரிக்கை முறையாக சென்றடையவில்லை.

ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி எட்டயபுரம் அருகே வைப்பாற்று பகுதி நிலங்களில் இருந்து பனங்கிழங்குகளை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில்பட்டி பகுதியில் ரூ.100-க்கு விற்பனை பொங்கல் பண்டிகையை சிறப்பிக்க பனங்கிழங்குகள் தயார்.

பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிலாளர்கள்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய அவற்றுக்கு பூஜை செய்து, பணிகளை தொடங்குவார்கள். பூஜையில், நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும். 

பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிலாளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி பகுதிகளுக்கு அடுத்தபடியாக எட்டயபுரம் அருகே தாப்பாத்தி, அயன்வடமலாபுரம் மற்றும் வைப்பாற்று கரையோர பகுதியில் சுமார் 2 லட்சம் பனை மரங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் கடைசி முதல் ஆனி வரை பதநீர் சீசன் இருக்கும். அதன் பின்னர் நுங்கு சீசன் 2 மாதங்களுக்கு காணப்படும். தொடர்ந்து முதிர்ந்த நுங்கு பனம்பழமாக மாறிவிடும். பழுத்து உதிரிந்த பனம்பழத்தை சேகரிக்கு பனைத் தொழிலாளர்கள், அதனை குறுமணலில் 2 அடி வரை ஆழம் தோண்டி புதைப்பது வழக்கம். 90 நாட்களில் வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் ஈரப்பதத்தில், பனை விதை கிழங்காக விளைந்து தைப்பொங்கல் பண்டமாக மாறிவிடும். 

பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிலாளர்கள்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில், எட்டயபுரம், அயன்வடமலாபுரம் மற்றும் வைப்பாற்று கரையோர பகுதி நிலங்களில் இருந்து பனங்கிழங்குகளை தோண்டி எடுக்கும் பணியில் பனை தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடைகளில் 25 எண்ணம் கொண்ட ஒரு பனங்கிழங்கு கட்டு ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிலாளர்கள்

இதுகுறித்து அயன்வடமலாபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை கூறுகையில், “கடந்த ஆவணி மாதம் வைப்பாற்றங்கரையோரம் சுமார் ஒரு லட்சம் பனை விதைகள் விதைத்துள்ளோம். பனங்கிழங்கை பொறுத்தவரை ஈரப்பதமும் தேவை, அதே வேளையில் வெயிலும் தேவைப்படும். ஆனால், இந்தாண்டு சரிவர மழை பெய்யவில்லை. இதனால் பனங்கிழங்கு விளைச்சல் என்பது சுமாராகவே உள்ளது. கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் பனங்கிழங்கு என்பதால் தமிழகம் முழுவதில் இருந்து வியாபாரிகள் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாகவே வந்து, தங்களுக்கு தேவையான பனங்கிழக்குகள் முன்வைப்பு தொகையாக அளித்துவிட்டு சென்றுவிட்டனர்.

பனை மரத்தை பொறுத்தவரை வேரில் இருந்து அதன் ஓலைகள் வரை அனைத்துமே பயன்பாடுள்ளது தான். அதிலும் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. எனவே, பொங்கல் பரிசு தொகுப்பில் பனங்கிழங்கை வழங்க வேண்டும் என கடந்த ஆண்டே கோரிக்கை விடுத்தோம். ஆனால், எங்களது கோரிக்கை முறையாக சென்றடையவில்லை. வரும் காலங்களில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் பனங்கிழங்கை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனாAshwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget