விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல், பருத்தி, நிலக்கடலையை தொடர்ந்து தற்போது பச்சைபயிறையும் கொள்ளுமுதல் செய்யப்பட உள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பச்சைபயறு கொள்முதல் திட்டத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் அறிமுகபடுத்துவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் திட்டம்
விவசாயிகளின் விளைபொருளுக்கு சரியான விலை வழங்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பச்சைபயறு சாகுபடி செய்த விவசாயர்களை நன்மை அடையச் செய்யும் வகையில், மத்திய அரசின் நேபட் (NAFED) நிறுவனத்துடன் இணைந்து பச்சைபயறு கொள்முதல் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
IPL 2025 RCB vs PBKS: பஞ்சாப்பை பழிதீர்க்குமா ஆர்சிபி? ரஜத்தின் ராஜநடையா? ஸ்ரேயாஸின் சிங்கநடையா?
ஆட்சியர் அறிக்கை
தற்போது உள்ளூர் சந்தையில் பச்சைபயறிற்கு 1 கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தரத்துக்கு ஏற்ப 1 கிலோ பச்சைபயறு ரூ.86.82 என்ற உயர்ந்த விலையில் அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;
378 மெட்ரிக் டன் பச்சைபயறு இலக்கு
மயிலாடுதுறை மாவட்டத்தில், நாகப்பட்டினம் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 378 மெட்ரிக் டன் பச்சைபயறு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
TVK Vijay: கண்ணியமாக நடந்து கொள்ள விஜய் சொன்னது ஏன்? ஓட்டு முக்கியம் பிகிலு! இதுதான் காரணமா?
தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தகம் நகல் மற்றும் புகைப்படத்துடன், தங்களது வட்டார விற்பனைக்கூட பொறுப்பாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், பதிவு செய்த விவசாயிகளுக்கு விற்பனைக்கூட பொறுப்பாளர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, விளைபொருள் கொண்டு வர வேண்டிய தேதியை தெரிவிப்பார்கள்.
கொள்முதல் அளவு மற்றும் காலக்கெடு
ஒரு ஹெக்டருக்கு 384 கிலோ அளவில் (அதாவது ஒரு ஏக்கருக்கு 155 கிலோ) பச்சைபயறு கொள்முதல் செய்யப்படும். இந்த திட்டம் 2024-2025 காலாண்டுக்கானதாகும், மேலும் பச்சைபயறு கொள்முதல் 29.06.2025 வரை தொடரும். விலைக்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் அதிகமான விவசாயிகள் பயன்பெறுமாறு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள்
மயிலாடுதுறை: பா. சங்கர் ராஜ் – 80122 24723
குத்தாலம்: பி.மா. பாபு – 82208 69684
செம்பனார்கோவில்: ச. நடராஜன் – 99439 17494
சீர்காழி: எம்.ஏ. பாரதிராஜ் – 90804 27055
விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பச்சைபயறு விலை ஆதரவு திட்டத்தில் (Price Support Scheme – PSS) பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

