மேலும் அறிய

என் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வழங்குங்கள்: ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை- காரணம் இதுதான்!

வெள்ளகாலம், வறட்சி காலம் இரண்டிலும் பாதிப்பு ஏற்படுவதால் தனது நிலத்தை அரசு எடுத்து கொண்டு அதற்குறிய தொகையை வழங்க வேண்டும் என்று விவசாயி குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, வேளாண்மைத் துறை  இணை இயக்குநர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் தேவைகளையும், குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

என் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வழங்குங்கள்: ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை- காரணம் இதுதான்!

அப்போது சீர்காழி தாலுக்கா அகணி கிராமத்தில் உள்ள தனது 5 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துகொண்டு அதற்குறிய தொகையை வழங்கிட வேண்டும் என்று கூறி, வீரமணி என்ற விவசாயி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுகுறித்து அவர் கூறுகையில், ''வெள்ள காலம், வறட்சிக் காலம் இரண்டிலும் பாதிப்பு ஏற்படுவதால் விவசாய பணிகளை தொடர முடியவில்லை என்றும், விவசாயம் செய்வதற்காக கடன் வாங்கி கடனாளியாக கஷ்டப்படுவதை விரும்பவில்லை என்றும், விவசாயத்தில் தொடர் இழப்பை சந்தித்து வருவதால் அகணி கிராமத்தில் உள்ள எனது 5 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துக்கொண்டு, அதற்குரிய தொகையை வழங்க வேண்டும்’’ என்று கூறி சீர்காழியை சேர்ந்த வீரமணி என்ற விவசாயி குறைதீர் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். 

என் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வழங்குங்கள்: ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை- காரணம் இதுதான்!

’’பயிர் பாதிப்படைந்த தனக்கு காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்றும், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் விவசாயிகளின் பங்களிப்பாக மொத்தம் 2,319 கோடி ரூபாய் செலுத்தப்பட்ட நிலையில், காப்பீட்டு நிறுவனம் 560 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது.

எனவே, வருங்காலங்களில், காப்பீட்டு நிறுவனம் பயிர்ச்சேதம் குறித்த கணக்கெடுப்பை வேளாண் துறை, வருவாய்த்துறை மற்றும் முன்னிலையில் மட்டுமே கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களைப் போன்று தமிழக அரசே காப்பீட்டை ஏற்று நடத்த வேண்டும்’’ என்றும்  அன்பழகன் என்ற விவசாயி கோரிக்கை விடுத்தார்.

என் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வழங்குங்கள்: ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை- காரணம் இதுதான்!

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, ’’நடப்பு சம்பா, தாளடி பருவ சாகுபடி இலக்காக 74,341 ஹெக்டேர்  பெறப்பட்டுள்ளது. இதில் சம்பா சாகுபடி பரப்பு இலக்காக 36,401 ஹெக்டேரும் மற்றும் தாளடி பருவ சாகுபடி இலக்காக 37,940 ஹெக்டேரும் இலக்காக பெறப்பட்டுள்ளது.

இதில் தற்போது வரை 15,201 ஹெக்டேரில் நேரடி விதைப்பும், 9370 ஹெக்டேரில் சாதா நடவும் மற்றும் 28229 ஹெக்டேரில் திருந்திய சாகுபடி பரப்பளவு ஆக கூடுதலாக 52800 ஹெக்டேர் பரப்பில் சம்பா, தாளடி பருவத்தில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும், சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான 445.2 ஹெக்டேர் அளவில் சாதா நாற்றங்காலும், 223.4 ஹெக்டேர் அளவில் திருந்திய நெல் சாகுபடி நாற்றங்காலும் கூடுதலாக 668.6 பரப்பில் சம்பா, தாளடி நாற்றங்காலும் உள்ளது.

என் நிலத்தை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வழங்குங்கள்: ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை- காரணம் இதுதான்!

நடப்பு சம்பா, தாளடி பருவத்திற்கு நீண்டகால மற்றும் மத்திய கால நெல் ரக விதைகளான ஆடுதுறை 51, சி.ஆர்.1009, சப்-1, டி.கே.எம்.13 ஆகிய விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தில் ஒரு கிலோவிற்கு 17.50 ரூபாய் மானியமும் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை விவசாயிகளுக்கு 680.52 மெ.டன் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 222.41 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும், தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் 1562 மெ.டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு 406 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget