மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; அமராவதி அணையில் நீர் திறப்பு நிறுத்தம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையிலிருந்து காலை வினாடிக்கு 175 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 9,957 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடியாக, காவிரி ஆற்றில் வினாடிக்கு,10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 957 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் 9,337 கனஅடியும், தென்கரை வாய்க்காலில் 200 கனஅடியும் கீழ்கட்டளை வாய்க்காலில் ஒரு கனஅடியும் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் 20 கனஅடியும் தண்ணீரும் திறக்கப்பட்டது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையிலிருந்து காலை வினாடிக்கு 175 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. அமராவதி அணைக்கு வினாடிக்கு காலை 278 கன அடி தண்ணீர் வந்தது 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 46.72 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி, அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 10.42 அடியாக இருந்ததால் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்