மேலும் அறிய
Advertisement
Madurai Festival : விவசாயத்தை கொண்டாடும் கிராம திருவிழா.. மதுரையில் களைகட்டிய நல்லேறு கட்டுதல் நிகழ்வு..
கோயில் பூசாரிகள் அம்மனுக்கு தேங்காய், பழம் சாம்பிராணி, சூடம் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து வழிபாடு மேற்கொண்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கப்பட்டது.
சித்திரை மாதம் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் திருவிழா நடைபெறும். குறிப்பாக விவசாயம் சார்ந்த வழிபாடுகளும் நடைபெறும். வெற்றிலைப் பிரி திருவிழா, கிராம கும்பிகொட்டுதல், மீன்பிடி திருவிழா, நெல் மணிகள் வைத்து வேண்டுதல் என பல விழாக்கள் நடைபெறும். அந்த வகையில் மேலூர் அருகே கம்பூர் சுற்றியுள்ள கிராமங்களில் நல்லேறு கட்டுதல் நிகழ்வும் நடைபெறும். அந்த நிகழ்ச்சி இந்தாண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
சித்திரை 1-ம் தேதி தமிழ் ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு நல்லேறு கட்டுதல் நிகழ்வு கம்பூர் பகுதியில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் கம்பூர் முத்துப் பிடாரி அம்மன் கோயில் அலங்கம்பட்டி, பெரியகற்பூரம்பட்டி சின்னக்கற்பூரம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள மந்தையம்மன் கோயில்களில் நல்லேறு கட்டுதலுக்கான வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.
நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு அதனை ஊர் மக்களுக்கு அறிவிப்பதற்காக வான வெடி வெடிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் தங்கள் உழவு கருவிகளான உழுகலப்பை, மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றை சாமி முன்பு வைத்து வழிபட்டனர். ஆண்டின் முதல் நாளில் தங்கள் உழவு தொழிலை தொடங்கும் முன்பு மழை தெய்வமான மாயோனிடம் தங்கள் ஊரில் நல்ல மழை பெய்து, விளைச்சல் சிறப்புற நடைபெற வேண்டி வழிபாடு நடத்திய பிறகு தங்கள் வயல்களில் முதல் நாள் உழவினை தொடங்குவது மரபாகும். இது பழங்காலத்திலிருந்த உள்ள இந்த மரபுகளை விடாது இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இது நல்லேறு பூட்டுதல் என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வில் ஊரின் சாமியாடி, பூசரிகள், காரணக்காரர்கள் , நாட்டாமை, அம்பலார் மற்றும் உழவுத்தொழில் செய்வோர் கலந்துகொண்டு சாமி வழிபாட்டினை மேற்கொண்டனர். கோயிலில் வந்திருந்த அனைவருக்கும் விபூதி சந்தனம் குங்குமம் வெற்றிலை பாக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கோயில் பூசாரிகள் அம்மனுக்கு தேங்காய், பழம் சாம்பிராணி, சூடம் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து வழிபாடு மேற்கொண்டு பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கப்பட்டது.
இது குறித்து கம்பூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், “எங்கள் கிராம பகதிகளில் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இது வெளியுலகத்திற்கு தெரியாத வண்ணமே உள்ளது. இதை வெளிப்படுத்தும் விதமாக திருவிழாவை ஆவணம் செய்து வருகிறோம். இதன் மூலம் எங்கள் பகுதி இளைஞர்கள் திருவிழா சடங்குகளை முறையை தெரிந்துகொள்வார்கள்” என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - watch video | அம்மை நோயை தடுக்க மதுரையில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion