watch video | அம்மை நோயை தடுக்க மதுரையில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு
திருவிழாவில் பெண்கள் பச்சரிசி வெல்லம் கலந்து தெள்ளுமாவை கலந்து விழாவில் பங்கு பெற்றவர்களுக்கு அளித்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் கம்பூர் கிராமத்தில் உள்ள சின்னக்கற்பூரம்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோயில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இதற்காக மக்கள் விரதம் இருந்து காலையில் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தனர். அதன்பிறகு மஞ்சள் தண்ணீர் நிகழ்வு நடந்தது. இதில் தண்ணீரில் மஞ்சள், வேப்பிலை கலந்து தங்கள் கேலிக்காரர்கள் மீது ஆண்களும் - பெண்களும் ஊற்றி விளையாடினர். மாலையில் சாமியை மலை ஏத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் வைந்தானை அடித்தல், கும்மிக்கொட்டுதல், ஒயிலாட்டம் ஆகிய பாராம்பரிய கலைகளை நிகழ்த்தப்பட்டது. பாட்டு வாத்தியார்கள் சாமிகளின் வரலாறு ஊரின் பெருமைகளை உணர்த்தும் பாடல்களை பாடினார்கள்.
#Madurau | மேலூர் வட்டம் கம்பூர் கிராமம் சின்னக் கற்பூரம்பட்டியில்
மந்தையம்மன் பங்குனி பொங்கல் திருவிழா.. நடைபெற்றது.
பாரம்பரிய கலைகளை நிகழ்த்தி மக்கள் உற்சாகமாக மக்கள் கலந்து கொண்டனர். Further reports to follow @abpnadu |@SRajaJourno @imanojprabakar @saranram @selena_hasma pic.twitter.com/U67s6vNmOl— Arunchinna (@iamarunchinna) April 12, 2022
#Madurau | மேலூர் வட்டம் கம்பூர் கிராமம் சின்னக் கற்பூரம்பட்டியில்
— Arunchinna (@iamarunchinna) April 12, 2022
மந்தையம்மன் பங்குனி பொங்கல் திருவிழா.. நடைபெற்றது.
பாரம்பரிய கலைகளை நிகழ்த்தி மக்கள் உற்சாகமாக மக்கள் கலந்து கொண்டனர். Further reports to follow - @abpnadu | @SRajaJourno | #kambur | #கம்பூர் | #melur pic.twitter.com/obfTMc0K6p


