Ayush Mhatre: 17 வயது மும்பை புயல்.. தட்டித்தூக்கிய தோனி! யார் இந்த ஆயுஷ் மாத்ரே? CSK | IPL 2025
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக 17 வயது இளம் வீரரை களம் இறக்கவிருக்கிறது சென்னை அணி. IPL மெகா ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் தற்போது தல தோனியால் கண்டெடுக்கப்பட்டிருக்கு ஆயுஷ் மாத்ரே யார் என்பதை பார்ப்போம்!
இந்திய கிரிகெட்டிற்கு எத்தனையோ ஜாம்பவான் வீரர்களை கொடுத்த மும்பையில் 2007 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் ஆயுஷ் மாத்ரே.. 6 வயதிலேயே கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் தனது தாத்தாவுடன் 80 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு பயிற்சிக்கு சென்ற ஆயுஷ் முறைப்படி கிரிக்கெட்டை கற்றொக்கொண்டது என்னவோ 10 வயதில் தான்.. தினமும் பயிற்சிக்கு சென்று திரும்பிய ஆயுஷ் மாத்ரேவிற்கு இடியாய் வந்து விழந்தது தந்தையின் வேலை இழப்பு.. ஆனாலும் தன் மகன் கிரிக்கெட் மீது கொண்ட ஈர்ப்பை தெரிந்த கொண்ட அவர் பயிற்சிக்கு தன் நண்பர்களிடம் கடன் வாங்கி நீ பயிற்சிக்கு செல் எதை பற்றியும் கவலை படாதே என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். அப்படி முறைப்படி பயிற்சிகளை கற்றுக்கொண்ட ஆயுஷ் மாத்ரேவின் ஆக்ரோசமான ஆட்டத்தை பார்த்த உள்ளூர் அணியான விரார்-சாய் நாத் ஸ்போர்ட்ஸ் கிளப் தங்கள் சீனியர் அணியில் அவரை இணைக்க முடிவு செய்தது. அந்த அணியில் உள்ள சீனியர் வீரர்களையும் தனது பேட்டிங்கால் அலறவிட்டர் ஆயூஷ்.
இதன் பின்னர் மும்பை அணிக்காக அதிரடியாக விளையாட அவரது பெயர் அங்கு பிரபலமானது. ஒன்பது முதல் தர ஆட்டங்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடித்த இவர் லிஸ்ட் ஏ போட்டிகளில் 458 ரன்களை குவித்துள்ளார். நாகலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 117 பந்துகளில் 181 ரன்களை குவித்தார். சவுராஷ்டிராவுக்கு எதிராக 93 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்சர்கள் உட்பட 148 ரன்கள் எடுத்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற இராணி கோப்பையில் மகாராஷ்டிராவுக்கு எதிராக 176 ரன்கள் எடுத்து அசத்தினார் , அதைத் தொடர்ந்து வதோதராவில் பரோடாவுக்கு எதிராக ஒ 52 ரன்கள் எடுத்தார்.
இதுவரை, ஒன்பது முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆயுஷ் இரண்டு சதங்கள் உட்பட 504 ரன்கள் எடுத்துள்ளார், இதில் இவரது சராசரி 31.50. இச்சூழலில் தான் இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் தன்னுடைய பெயரை 3 லட்சத்திற்கு பதிவு செய்தார். ஆனால் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் சிஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக ஆயுஷ் மாத்ரேவை சென்னை அணி எடுத்திருக்கிறது. இவரை தேர்வு செய்ததில் தோனியின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கெய்க்வாட் , பத்திரனாவை போல் சிஎஸ்கே இவரையும் சிறந்த வீரரா உருவாக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





















