மேலும் அறிய

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சுழற்பந்து வீச்சாளர், தமிழ் நாட்டின் கிரிக்கெட் அடையாளம், சர்வதேச டெஸ்ட் போட்டியில் 537 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம் இல்லாதா அணி என்றால் அது இந்திய அணி மட்டும் தான். கிட்டத்தட்ட 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து தற்போது வரை உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களை உலக அரங்கிற்கு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறது. அதில் முக்கியமானவர்கள் ஏரபள்ளி பிரசன்னா, பிசன் சிங் பேடி, அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். 

1986ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர் ஆர்.அஷ்வின். இவரின் தந்தை பெயர் ரவிச்சந்திரன். இவர் கிளப் லெவல் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடியவர். சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்ட அஸ்வின், தனது 9 வயதிலேயே கிரிக்கெட் பயணத்தை தொடங்கிவிட்டார். இவர் ஒரு பேட்ஸ்மேனாக தான் விளையாட ஆரம்பித்தார். பின்பு சில பல காரணங்களால் சுழற்பந்து வீச்சாளராக அவதாரம் எடுக்கும், சூழலுக்கு தள்ளப்பட்டார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார்.அதன்பின், அபார பந்துவீச்சு திறனால் இந்திய அணியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தி வரும் அஸ்வின், அதிவேகமாக 50 விக்கெட், 100, 150, 200 விக்கெட்டுகள், 250, 300, 350 விக்கெட்டுகள், 400, 450, 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 106 இன்னிங்ஸ்களில் இதுவரை 537 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரராக இருக்கிறார். 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ளே முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் 9 வது இடத்தில் இருக்கிறார். 

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் பத்து முறை மேன் ஆப் தி சீரியஸ் விருதை பெற்றுள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்களும், 65 டி20 கிடிக்கெட் போட்டிகளில் 72 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 முறை 5 விக்கெட்களையும், 8 முறை 10 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார். 

இந்த நிலையில் தான் பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மழையால் பாதிக்கப்பட்ட போது ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் சிலர் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது என பதிவிட்டு இருந்தனர். இதனிடையே தான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் வீடியோக்கள்

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Embed widget