Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |
Zomato ல் விதவிதமான உணவுகளை தேடுவதை பார்த்திருப்போம் ஆனால், அதே சோமேட்டோவில் பலர் Girlfriend வேண்டும் என வலைவீசி தேடியிருக்கிறார்கள்.
GOOGLE , AI போன்றவற்றில் மக்கள் வினோதமான தகவல்களை தேடுவார்கள். இது குறித்த தகவல்களை அந்தந்த நிறுவனம் ஆண்டறிக்கையின் போது வெளியிடுவது வழக்கம். அப்படித்தான் இந்தியாவின் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ZOMATO-வில் பலர் காதலி மற்றும் மணப்பெண் என தேடி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ZOMATO நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு மற்ற மாநிலங்களையெல்லாம் விட இந்தியாவின் தலை நகரான டெல்லியில் தான் அதிக ஆர்டர்கள் செய்யப்பட்டிருக்கிறது.
மும்பையில் பெறப்பட்ட ஆர்டர்களின் மூலம் ZOMATO அதிக வருவாயை ஈட்டி இருக்கிறது,அதிகபட்சமாக பெங்களூருவில் மே மாதம் 12 அன்று 3 கோடி ஆர்டர்கள் பெறப்பட்டிருக்கிறது. அதே நேரம் ஜனவரி 29ம் தேதி 16.8 லட்சம் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டின் புத்தாண்டு தின கொண்டாட்டங்களின் போது கிடைத்த ஆர்டர்களை விட இந்த ஆண்டு ஆர்டர்கள் அதிகரித்துவிட்டன என்று ZOMATO கூறியிருக்கிறது.
குறிப்பாக 2024-ஆம் ஆண்டில் 4940 பேர் ZOMATO-வில் காதலியை தேடியுள்ளனர். இதில் 40 பயனர்கள் இந்தியில் துல்ஹன் அதாவது மணப்பெண் என்று சோமேட்டோவில் தேடியுள்ளனர். இதை வைத்து பார்க்கையில் வட மாநிலத்தவர்கள் இதை அதிகம் தேடியிருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அடப்பாவிங்களா இதெல்லாமா ZOMATOவில் தேடுவீங்கள் என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.