Vaniyambadi News | ஓட்டலுக்கு திடீரென வந்த நபர் ஊழியரை தாக்கிய கொடூரம் அதிர்ச்சி CCTV காட்சி!
வாணியம்பாடி அருகே துரித உணவகத்தில் நுழைந்து ஊழியரை இளைஞர்கள் சரமாரியக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை கூட்டுச்சாலையில், ரிஸ்வான் அஹமது என்பவர் FAST FOOD நடத்தி வரும் நிலையில், ரிஸ்வானின் கடையில் அவரது தம்பி மகன் சலீம் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 23 ஆம் தேதி இரவு ரிஸ்வானின் கடையிற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த சலீமை ஆபாச வார்த்தைகளால் திட்டி அவரிடம் தகராறில் ஈடுப்பட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த சலீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து ரிஸ்வான் இன்று வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உணவகத்தில் புகுந்த இளைஞர்கள் சலீமை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது