Padayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி
ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி
மூணாரில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் படையப்பா யானை மீண்டும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலில் நடமாடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் என்பது வனப்பகுதி நிறைந்த பகுதியாகும். இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. சாலையோரம் உலா வரும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்வதும். புகைப்படம் எடுப்பதும் வழக்கமாகும்.
இந்நிலையில் மூணாரில் பொது இடங்கள் மற்றும் மக்கள் குடியிறுப்புகளுக்கு அருகே அடிகடி படையப்பா யானை உணவு தேடி உலா வந்துக்கொண்டிருந்தன. கடும் வெயில் நிலவியதால் வனபகுதியில் உணவு கிடைக்காமல் சாலையோரா கடைகள் பொதுமக்கள் குடியிறுப்புகளுக்கு உள்ள திண்பண்டங்கள் விளைபயிர்களை உணவாக எடுத்துக்கொண்டது. எப்பொழதும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் படையப்பா யானை நடமாடினாலும் யாருக்கும் எவ்வித அச்சறுத்தலையும் இதுவரை ஏற்படுத்தியது கிடையாது. ஆனால் சாலையோர கடைகளை சேதப்படுத்துவதும் வழக்கமாகும்.
இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பின்னர் உணவு தேடி வந்த படையப்பா யானை முணார் அருகேயுள்ள குப்பைகள். மற்றும் காய்கறி கழிவுகளை தரம் பிரிக்கும் இடத்திற்க்கு வந்து அங்கு தரம் பிரிந்து வைக்கப்பட்டிந்த காய்கறிகளை உணவாக எடுத்துக்கொண்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள விளைநிலைங்களையும் சேதப்படுத்தியாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே சம்பவிடம் விரைந்த வனத்துறையினர் படையப்பா யானையை வனப்பகுதிகுள்ளாக விரட்டினர்.