DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?
சார்.. பாட்டில வச்சு உயிர் போற மாதிரி அடிக்குறாங்க.. இங்க பாருங்க சட்ட ஃபுல்லா ரத்தம், எப்படி அடிச்சிருக்காங்க.. ஹாஸ்பிட்டல் உள்ளார கூட வந்து அடிச்சா என்ன பண்றது.. என்று சிட்டிங் எம்பி ஜெகத்ரக்ஷகன் அழுதுக்கொண்டே புலம்பும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டியில் ஜுலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், களத்திலிருந்து அதிமுக ஒதுங்கிக்கொண்ட நிலையில்.. விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் திமுக - பாமக இரண்டும் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன.
தேர்தல் என்பதை தாண்டி திமுக - பாமக இடையே இந்த நேரத்தில் கேங் வார் உருவெடுத்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி ஆசூர் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் திமுக கிளை செயலாளர் கண்ணதாசன் மணல் எடுத்ததாக சொல்லபடுகிறது, அதனை பாமகவை சேர்ந்த சிலர் தட்டிக்கேட்க, தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேன்ற கண்ணதாசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த பாமகவினர் சிலர் நேற்று முந்தினம் இரவு தங்களுடைய ஆதரவாளர்களை திரட்டி கொண்டு இரவு 12 மணி அளவில் தன்னுடைய வீட்டில் தேர்தல் பணி மேற்கொண்டு இருந்த கண்ணதாசனை சரமாரியாக தாக்கியுள்ளனர். 10 பேர் கொண்ட கும்பல் கையில் மது பாட்டில்களுடன் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காது மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில், இந்த சம்பவத்தை அறிந்த அவருடைய தம்பி, கண்ணதாசனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் திமுக பாமக பிரமுகர்கள் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதில், தற்போது இரு தரப்பும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தான் சிட்டிங் எம்பி ஜெகத்ரட்சகன் அழுதுக்கொண்டே மருத்துவமனை வாசலிலிருந்து பேசியது இந்த விவகாரத்தை புதாகரமாக்கியுள்ளது..