Vijay Maanadu : 100 அடி உயரத்தில் கொடி உச்சியில் வைக்கப்பட்ட கலசம்கெத்து காட்டும் விஜய்
விக்கிரவாண்டியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தவெக கொடி 100 அடி உயரத்தில் பறக்கப் போகிறது. மாநாட்டில் விஜய் கொடியை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கும் தவெகவின் முதல் மாநாட்டின் பக்கம் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. விஜய்யின் அரசியல் நிலைப்பாடு என்ன? யார் யாரெல்லாம் கட்சியில் சேரப் போகிறார்கள் மேடையில் விஜய் பேசப்போகும் அரசியல் என்ன என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மாநாட்டிற்காக 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு மத்தியில் விஜய் ரேம்ப் வாக் 800 மீட்டம் தூரத்திற்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்யாத ஒன்றை விஜய் செய்வதாக தற்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் விக்கிரவாண்டியில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ராட்சத கிரேன்கள் மூலம் கம்பத்தை நிறுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. மாநாட்டில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் விஜய் கொடி ஏற்றவிருக்கிறார். இந்த கொடியை ஏற்றுவதற்கு 10 நிமிடம் ஆகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கொடியை அங்கேயே நிரந்தரமாக வைத்திருப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தவெக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடிக்கம்பம் அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மாநாட்டில் தவெக கொடி ஏற்றம் அரசியல் களத்தில் முக்கியமானதாக மாறும் என தவெக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்