மேலும் அறிய

VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

விசிகவில் முக்கிய பொறுப்பில் இருக்கக் கூடிய ஆதவ் அர்ஜூனா விஜய்க்காக வேலை பார்க்கிறாரா என்ற சந்தேகம் அந்தக் கட்சியினருக்கே வந்துள்ளது. விஜய்யும் விசிகவின் எந்த அடையாளமும் இல்லாமல் ஆதவ் அர்ஜூனாவை அறிமுகம் செய்துள்ளார். இத்தனை நாட்களாக திருமா நடவடிக்கை எடுக்காததன் பின்னணி என்ன என்று பேச்சு ஆரம்பமாகியுள்ளது. 

துணை முதலமைச்சர் உதயநிதியை குறிவைத்தே விஜய்யின் அரசியல் பிரவேசம் இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே பேச்சு இருக்கிறது. அதனை வைத்தே விசிக துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் விஜய்க்கு ஆதரவாக காய்களை நகர்த்துவதை புத்தக வெளியீட்டு விழா காட்டுகிறது. இந்த புத்தக வெளியீட்டு விழா விஜய்க்கான அரசியல் விழாவாக மாறியுள்ளதாக பேச்சு இருக்கிறது. 2026 தேர்தலில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும்; பிறப்பால் இனி முதலமைச்சர் தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது என துணை முதலமைச்சர் உதயநிதியை அட்டாக் செய்துள்ளார் ஆதவ் அர்ஜூனா. கூட்டணியில் இருக்கக் கூடிய திமுகவை தொடர்ந்து விமர்சிப்பதையே ஆதவ் கடந்த சில நாட்களாக செய்து வருகிறார். 

விஜய்க்காக தான் அவர் இதனை செய்கிறாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. விஜய்க்காக வேலை பார்ப்பவராக ஆதவ் அர்ஜூனா மாறியிருக்கிறார் என்று விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸே சொல்லியிருக்கிறார். புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேச ஆரம்பிக்கும் போது கூட மற்றவர்களை அவரவர் அடையாளத்துடன் சொல்லிவிட்டு ஆதவ் அர்ஜூனாவை விசிக துணை பொதுச்செயலாளர் என சொல்லாமல் பெயரை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தார். 2026 தேர்தலில் விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஆதவ் அர்ஜூனா இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் திருமா, ஆதவ் மீது எந்த ஆக்‌ஷனும் எடுக்காமல் அமைதி காப்பதன் பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. ஒன்று, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசிய விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்காக ஆதவ்-ஐ வைத்து திருமா காய்களை நகர்த்தி வருவதாக சொல்கின்றனர். புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு திருமாவுக்கு பிரஷர் இருக்கிறது அவரது மனசு முழுக்க நம்முடன் தான் இருக்கும் என விஜய் மேடையில் பேசியதும் இணக்கமான சூழல் இருப்பதை காட்டுவதாகவே அமைந்திருப்பதாக சொல்கின்றனர்.

மற்றொன்று, ஆதவ் விஜய்க்கு வேலை பார்க்கிறார் என ஆளூர் ஷாநவாஸ் பேசியதை பார்த்தால் ஆதவ்-ஐ விசிகவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திருமா எந்த ஆக்‌ஷனும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது. ஏற்கனவே திமுக மற்றும் விசிகவுக்காக தேர்தல் வேலைகளில் ஈடுபட்ட ஆதவ் அர்ஜூனா 2 கட்சிகளின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். அவர் விஜய்யுடன் சேர்ந்துவிட்டால் அது திமுக கூட்டணிக்கு சிக்கலை கொடுக்கும் என திருமா நினைப்பதாக சொல்கின்றனர்.

புத்தக வெளியீட்டு விழாவை தொடர்ந்து திருமா எடுக்கப்போகும் நடவடிக்கையே 2026ல் அவர் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

அரசியல் வீடியோக்கள்

VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE
VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் -  மத்திய அரசு எச்சரிக்கை
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODETVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் -  மத்திய அரசு எச்சரிக்கை
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
Embed widget