TN New DGP | தமிழ்நாட்டின் புதிய DGP?ரேஸில் மூன்று பேர் !டிக் அடித்த ஸ்டாலின்| Sandeep Rai Rathore
தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு விரைவில் நியமனம் செய்ய உள்ளதாக பிரத்யேக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததை அடுத்து அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது. சங்கர் ஜிவால் ஓய்வு பெற்று இரண்டு மாதங்களான நிலையில், தமிழக அரசு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது.
டிஜிபி நியமனத்தை பொறுத்தவரை சீனியர் ரேங்கில் உள்ள 8 பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசு தயார் செய்து யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு அனுப்பும். அந்த பட்டியலில் மூவரை தேர்ந்தெடுத்து யுபிஎஸ்சி மீண்டும் மாநில அரசுக்கு அனுப்பும். அதில் ஒருவரை டிஜிபியாக தமிழக அரசு தேர்ந்தெடுக்கும், இதுதான் நியமன முறை..
இந்நிலையில் தமிழக அரசு மூத்த ஐபிஎஸ் அதிகரிகளான ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், சீமா அகர்வால், கே.வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வல், வினித் தேவ் வாங்கடே, ஜி, வெங்கடராமன், சஞ்சய் மாத்தூர் உள்ளிட்ட 8 பேர் பட்டியலை யுபிஎஸ்சிக்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
அதில் தற்போது யுபிஎஸ்டி சீமா அகர்வால், சந்திப் ராய் ரத்தோர் மற்றும் ராஜீவ் குமார் ஆகிய மூவரின் பேரை செலக்ட் செய்து தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்த மூவரில் தற்போது தமிழக அரசின் சாய்ஸாக இருப்பது சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ரந்தீப் ராய் ரத்தோர் என கூறப்படுகிறது. அடுத்த தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ரத்தோரை முதல்வர் ஸ்டாலின் விரைவில் நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.





















