Thiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!
பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தகுதியானவர்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும் எனவும் ஆணவக் கொலைகளைத் தடுக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் எஸ்சி. எஸ்டி, மக்களுக்கு எதிராகப் பெருகிவரும் வன்கொடுமை பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்களில் இழிவைக் குறிக்கும் வகையில் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றிட வேண்டும் என திருமாவளவன் திமுகவுக்கு செக் வைத்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் 2024 அக்டோபர் 10 ஆம் நாளான நேற்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையை ஏற்று மாநில எஸ்சி.எஸ்டி ஆணையம் அமைத்தது, எஸ்சி.எஸ்டி துணைத் திட்டத்துக்கான சட்டம் இயற்றியது, தொழில் முனைவோர்களுக்கென புதிய திட்டத்தை உருவாக்கியது உட்பட பட்டியல் சமூக மக்களுக்காகப் பல நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசுக்குஇந்த உயர்நிலைக்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. அதே நேரத்தில், இன்னும் பல முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம். குறிப்பாக, பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தகுதியானவர்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசமைப்புச் சட்டப் பிரிவு 16 (4 ) இன் படி சட்டம் இயற்ற வேண்டும்; அரசுத் துறைகள் அனைத்திலும் பின்னடைவுக் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்; ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்; எஸ்சி. எஸ் டி, மக்களுக்கு எதிராகப் பெருகிவரும் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; எஸ்சி மக்களின் இட ஒதுக்கீட்டின் அளவை 24% ஆக உயர்த்த வேண்டும்; எஸ்சி பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்களில் இழிவைக் குறிக்கும் வகையிலுள்ள 'ன்' விகுதியை, பிற்படுத்தப்பட்டோருக்கு மாற்றப்பட்டது போல ‘ர்’ என முடியும் வகையில் மாற்ற வேண்டும் - போன்றவை உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கனவே அரசின் பார்வைக்கு முன்வைத்துள்ளோம். ஆனால், அந்தக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவற்றை பரிசீலித்து காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றிட முன்வர வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.