(Source: ECI/ABP News/ABP Majha)
Thanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரி
வேலை நேரத்துல என்னமா போன் உனக்கு என்று போன் பேசியபடி வேலை செய்த பெண் பொறியாளராரின் செல்போனை தஞ்சை மேயர் ராமநாதன் பிடுங்கி வைத்த சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது.
தஞ்சை டபீர்குளம் ரோடு வார்டு 11 பகுதியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் தண்ணீர் தொட்டி தூய்மையாக இருக்கின்றதா பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நடைபெற்றுள்ளதா மீன் விளக்குகள் மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளை அதிகாரிகளிடம் சொல்லி அதனை குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் என பொறியாளரிடம் மேயர் தெரிவித்தார். அப்போது பொறியாளர் ஆனந்தி செல்போன் பேசியபடி மேயர் சொல்வதை காதில் வாங்காமல் இருந்தார்.
இதனை திரும்பிப் பார்த்த மேயர், பொறியாளார் ஆனந்தி செல்போன் பேசியதை பார்த்ததால் அவரது செல்போனை பிடுங்கி ஆப் செய்து அவரது பாக்கெட்டிற்குள் வைத்தார். மேலும் அந்த அதிகாரியை கூப்பிட்ட மேயர் பணியின் போது செல்போன் பேசக்கூடாது எனவும் பொதுமக்கள் குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் பிரச்சினைகளை குறிப்பெடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்
பொறியாளரின் செல்போனை மேயர் பிடிங்கி வைத்த இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.