மேலும் அறிய

Shiv das meena | "விருப்ப ஓய்வா.. No" ஸ்டாலின் அதிரடி! சிவ்தாஸ் மாற்றம் பின்னணி?

தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டது விவாதத்தை கிளப்பிய நிலையில்,  மாற்றத்திற்கான பின்னணி என்ன என சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு முதன்மை செயாளர் வெளியிட்டார். கூடுதல் பொறுப்பு என எதுவும் போடாததால் அவர் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியான நிலையில்  புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியபிக்கப்பட்டார்.

சிவ்தாஸ் மீனாவின் பூர்வீகம் ராஜஸ்தான். இவர் ஜெய்ப்பூரில் சிவில் எஞ்ஜினீயரிங் படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிவ்தாஸ் மீனா 30 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களின் ஒரு செயலாளராக இருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவர் மத்திய துறைக்கு மாற்றப்பட்டார். மத்தியில் சுற்று சூழல் மற்றும் வனத்துறைக்கு கீழ், மாசு கட்டுப்பாடு மத்திய பிரிவின் தலைவராக இவர் பணியாற்றி வந்தார்.  அதன் பின் 2021 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டார். திமுக ஆட்சியில் அவர் நகராட்சி நிர்வாக துறை செயலாலராக பதவி வகித்து வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமணம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் தான் அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.

தமிழகத்தில் கட்டிடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தான் நியமனம் செய்யப்படுவர் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் முதல் தலைவராக  முன்னாள் தலைமைச் செயலாளரான கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவர் பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதமே முடிந்த நிலையில் காலியாக இருந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் முன்னாள் தலைமை செயலாளராக சிவ்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்னும் ஓய்வு பெறாத நிலையில் தற்போது தலைமை செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது கேள்விக்குள்ளனது.

இவரை மாற்றியதற்கான முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சிவ்தாஸ் மீனாவுக்கு முதல்வர் ஸ்டாலினிடம் நல்ல பெயர் உள்ளது. அதேவேளையில் சிவ்தாஸ் மீனா விரைவில் பணி ஓய்வு பெற உள்ளதாக சொல்லப்படுகிறது. சிவ்தாஸ் மீனா ஓய்வு பெற்றாலும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவே ஸ்டாலின் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவ்தாஸ் மீனாவுக்கு அக்டோபர் மாதத்துடன் பனி முடிவடைய உள்ள நிலையில் அவர் அதற்கு VRS கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் வீடியோக்கள்

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget