Savukku Shankar Hospitalized : திடீர் நெஞ்சுவலி..? ICU-வில் சவுக்குபின்னணி என்ன?
கோவை மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு விசாரணைக்காக சவுக்கு சங்கர் கோவை அழைத்துவரப்பட்டுள்ளார்.
அங்கு ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது, விசாரணை முடிந்து இன்று சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வந்தபோது வயிறு வலி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை வளாகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியுள்ளது. இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரனமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் வயிற்று வலி என தெரிவிப்பதாகவும் சவுக்கு ஆதரவாளர்கள் புகார் கூறி வருகின்றனர்.
ஆனால் காவல்துறை தரப்பில் சவுக்கு சங்கருக்கு வயிற்றுவலி என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்திற்குள் பத்திரிகையாளர்களையும் போலீசார் அனுமதிக்காததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எனவே சவுக்கு சங்கருக்கு ஏற்பட்டது வயிற்று வலியா அல்ல நெஞ்சு வலியா என்ற உண்மை நிலை குறித்த சந்தேகம் நீடித்து வருகிறது.