KN Nehru : ”KN நேருவை நெருங்கவே முடியல” சேலம் MLA-க்கு அடித்த JACKPOT! அமைச்சராகும் ராஜேந்திரன்?
சேலத்துக்கு பொறுப்பாளரா அமைச்சர் கே என் நேரு போட்டு இருக்காங்க, அவர்கிட்ட போய் பேச முடியுமா? சேலத்துக்கு மந்திரி பதவி வேண்டும், இருந்தா தான் ஜெயிக்க முடியும் என்று திமுக நிர்வாகி ஒருவர் ஓப்பனாக மேடையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், வருகிற அமைச்சரவை மாற்றத்தில் சேலத்திற்கு ஒரு மந்திரி பதவியை கொடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரபரத்து வருகிறது..
சேலம் மாவட்டத்தை பொறுத்த அளவில் 11 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன அதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவால் வெறும் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. திமுக சார்பில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினராக பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் மட்டுமே வெற்றி பெற்றார். அதனால் சேலம் என்னுடைய கோட்டை என்று மார்தட்டிக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்நிலையில்தான் சேலத்தின் பொறுப்பாளராக அமைச்சர் கே என் நேரு நியமிக்கப்பட்டார். அப்போதிலிருந்து அதிமுகவின் கோட்டையான சேலத்தில் இருந்து ஒவ்வொரு கல்லாக உருவ தொடங்கினார் கே என் நேரு. சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் சேலத்தில் திமுக வெற்றி பெற்றது. அண்மையில் நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலிலும் திமுக வேட்பாளர் செல்வகணபதி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று அசத்தல் வெற்றி பெற்றார்.
ஆனாலும் கே என் நேருவை எளிதாக அணுகி பேச முடியவில்லை, பிரச்சனைகள் சொல்வதற்கும், தேவைகளை கேட்பதற்கும் நம்ம ஊரு காரர் ஒருவர் அமைச்சராக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் சேலம் திமுக நிர்வாகிகள் மத்தியில் நீண்ட நாட்களாகவே நிலவி வருகிறார்.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்திலேயே, வெற்றி பெற்றவர் சேலம் வடக்கு எம்எல்ஏ ராஜேந்திரன் என்பதா அவருக்கு திமுக அமைச்சர் பதவி கொடுக்கும் என்று முன்பில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக திமுக எம்பி செல்வகணபதி அதிவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதிலும், ராஜேந்திரன் ஒரு முக்கியமான காரணம் என்று தலைமைக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது.
இப்படிப்பட்ட சூழல்தான், கட்சி நிகழ்ச்சியில் பேசிய திமுக நிர்வாகி ஒருவர் "தளபதி என்னமோ சேலத்துக்கு மந்திரி பதவி கொடுக்க பயப்படுகிறார், சேலத்துக்கு மந்திரி பதவி வேண்டும். பொறுப்பாளரா அமைச்சர் நேருவை போட்டு இருக்காங்க, நேரு அண்ணன் கிட்ட போய் நம்ம பேச முடியுமா? தாய் கிட்ட பால் குடிச்சா தான் வயிறு நோம்பும், வேற தாய் கிட்ட பால் குடிச்சா கூச்சம் தான் வரும். நமக்கு ஒரு மந்திரி கொடுத்தால் தான், அண்ணா இதை கொஞ்சம் பண்ணி குடுங்க அப்படின்னு உரிமையா கேட்கலாம். யாருமே கட்சிக்காரர்கள் மதிக்க மாட்றாங்க" என்றும் குமுறி தள்ளிவிட்டார்.
இந்நிலையில் தான் நீண்ட நாட்களாகவே அடிபட்டு வரும் அமைச்சரவை மாற்றத்தில், இம்முறை சேலம் ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி கொடுப்பதன் மூலம், 2026 தேர்தலில் சேலம் திமுக நிர்வாகிகள் ஜோஷாக வேலை பார்ப்பார்கள், மேலும் எடப்பாடியை எதிர்த்து அரசியல் செய்யவும் சேலத்தில் அது உதவியாக இருக்கும். சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பவர் சென்டர் கிடையாது என்று இமேஜையும் உருவாக்க முடியும் என்று திமுக சீனியர்கள் ஆலோசித்துள்ளனர். ஏனென்றால் கொங்கு மண்டலம் நான் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக கடந்த தேர்தலில் இருந்தது. அதில் ஓட்டை போட்டு விட்டாலே எளிதாக 2026 தேர்தலை வெற்றி பெற்று விடலாம் என்று நம்புகிறது திமுக.
இந்நிலையில் தான் சேலம் எம் எல் ஏ ராஜேந்திரனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்கிற பேச்சு திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.