Rahul Slams Modi | டேமேஜ் ஆகும் மோடி இமேஜ்? மதிக்காத உலக நாடுகள் கோட்டை விடும் இந்தியா? | BJP | Congress
இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி ஆசிய வளர்ச்சி வங்கி, பாகிஸ்தானிற்கு சில ஆயிரம் கோடிகளை கடனாக வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியுறவுக் கொள்கையில் தோற்றுவிட்டதா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டினாலும், முக்கிய உலக நாடுகளின் தலைவர்கள் யாருமே முன்வந்து பாகிஸ்தானிற்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இந்தியாவின் உற்ற நட்பு நாடு எனப்படும் அமெரிக்கா கூட, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் பழைய பிரச்னைகள் அடிப்படையிலானது என்பது போலவே பேசியது. இதனிடையே, ஆப்ரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருந்தபோதே , இந்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 8 ஆயிரத்து 600 கோடி ரூபாயை கடனுதவியாக விடுவித்தது. அந்நாடு பாகிஸ்தானிற்கு ஆதரவாக செயல்படுவதகாவும், இந்த நிதியை தீவிரவாதத்திற்கு ஆதரவாக பயன்படுத்தக் கூடும் என்ற இந்தியாவின் கருத்துகளை IMF ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானிற்கு 800 மில்லியன் அதாவது சுமார் 6 ஆயிரத்து 852 கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியுள்ளது. அந்நாடு தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருப்பதாக் IMF -ல் சொன்ன அதே கருத்தையே ஆசிய வளர்ச்சி வங்கியிடமும் இந்தியா வலியுறுத்தி இருந்தது. ஆனால், இந்த வங்கியும் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஜுன் 1ம் தேதி தான் ஆசிய வங்கியின் தலைவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த இரண்டாவது நாளிலேயே பாகிஸ்தானிற்கு நிதியுதவி கிடைக்கிறது என்றால், மோடிக்கான மதிப்பு இங்கு என்ன? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ஆசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மோடி செல்வாக்கை இழப்பதே இதை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அல்ல இவர் சரண்டர் மோடி என ராகுல் காந்தியும் கடுமையாக விமர்சித்துள்ளார். ட்ரம்ப் மேற்கொண்ட ஒரு தொலைப்பேசி உரையாடலுக்கே, பாகிஸ்தான் பிரச்னையை பிரதமர் கைவிட்டுவிட்டார் என சாடியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானை இரண்டாக பிரித்து வங்கதேசத்திற்கு காங்கிரஸ் சுதந்திரம் வாங்கி கொடுத்தது. நாங்கள் யாருக்கும் அடிபணியவில்லை. ஆனால், பாஜக இதே வேலையாகவே உள்ளது என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடிக்கே தனிப்பட்ட முறையில் நண்பர் என கூறப்படும் ட்ரம்ப், இந்தியாவிற்கான அமெரிக்கா தூதரையே இன்னும் நியமிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக பிரதமர் மோடி, தொடர்ந்து ஜி7 மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். ஆனால், இந்த முறை அவருக்கு அழைக்கப்படவில்லை. இது, அமெரிக்கா சொன்னதுமே வரிகளை குறைத்தார், சொன்னதுமே பாகிஸ்தான் உடனான போரையும் நிறுத்தினார். அப்படி இருந்தும் ஜி7 மாநாட்டிற்கு அழைக்கப்படாதது ஏன்? சர்வதேச அரங்கில் மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதையே இந்த நிகழ்வுகள் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இது வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய தோல்வி என்றும் குற்றம்சாட்டி வருகின்றன.





















