PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVE
நேற்று ராஜ் பவனில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் அமைச்சர் பிடிஆர் கலந்துகொள்ளாதது சர்ச்சைக்குள்ளான நிலையில், அவர் பங்கேற்காததற்கு ஒரு முக்கிய காரனம் உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான அமைச்சர்களில் ஒருவர், பிடிஆர். டிஎம்கே ஃபைல்ஸ் ஆடியோ வெளியானதில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் அந்த ஆடியோவுக்கு பிறகு நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பிடிஆரிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டது. இதன்மூலம் முதல்வருக்கு பிடிஆர் மேல் மனக்கசப்பு இருந்ததும் உறுதியானது.
முன்னதாக டிஎம்கேவின் டாப் அமைச்சர்கள் லிஸ்டில் இருந்த பிடிஆர் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பார். இப்படியான நிலையில் சில மாதங்களுக்கு பிறகு, முதல்வருக்கு பிடிஆர் மேல் இருந்த கோபம் சற்று தணிந்ததாகவும், மேலும் நிதித்துறையை அவரை விட யாரும் சிறப்பாக கையாள முடியாது என முதல்வர் நினைப்பதாலும் இந்த முறை அமைச்சரவை மாற்றத்தின் போது மீண்டும் நிதித்துறையை அவருக்கே ஒப்படைத்துவிடலாம் என ஸ்டாலின் முடிவுசெய்ததாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் வெளியான அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பில் பிடிஆரின் பெயர் இடம்பெறாறது அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. மனைவி மகளுடன் துணை முதல்வர் உதயநிதி, திமுக அமைச்சர்கள், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் என அனைவரும் இந்த விழாவில் பங்கேற்றனர். ஆனால் திமுக அமைச்சர்கள் இருவர்கள் மட்டும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆரும் தான் ஆப்செண்ட் ஆகியுள்ளனர்.
அமைச்சர் சிவசங்கர் மகனின் மேல்படிப்பு சம்பந்தமாக லண்டன் சென்றுள்ளதாகவும், முதல்வரிடம் ஏற்கனெவே லீவ் இன்ஃபார்ம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.. இப்போது தான் அனைவரின் கவனமும் பிடிஆர் பக்கம் திரும்பியுள்ளது.
உதயநிதி துணை முதல்வராக பங்கேற்கும் முதல் விழா இதை ஏன் பிடிஆர் புறக்கணித்தார் என்ற விமர்சனங்கள் எழத்தொடங்கியது. ஒருவேளை தனக்கு இலாகா மாற்றம் செய்யாதது தான் காரணமா இல்லை வேறு ஏதேனும் மனக்கசப்பு காரணமாக அவர் வரவில்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் உண்மையில் அமைச்சர் பிடிஆர் ஏன் நேற்றைய விழாவில் பங்கேற்வில்லை அதன் பின்னணி என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் பிடிஆரின் தாயாரின் உடல்நிலை சரியில்லாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை வரை தாயுடன் மருத்துவமனையில் இருந்த பிடிஆர் நேற்று மதியம் சென்னை புறப்படலாம் என திட்டமிட்டு ப்ளைட் புக் செய்துள்ளார். ஆனால் தொழில் நுட்பக்கோளாறு காரணம் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால் அவரால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் முதல்வருக்கு போன் போட்டு காரணத்தை சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் பதவியேற்பு விழா புகைப்படங்களில் அமைச்சர் பிடிஆர் இடம்பெறாறது சர்ச்சைக்குள்ளான நிலையில், அவர் உடனடியாக அடுத்த ஃப்ளைட் பிடித்து நேற்று மாலை சென்னை வந்தடைந்தார். அதன்பிறகு உடனடியாக துணை முதலவ்ர் உதயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரமுடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அமைச்சர் பிடிஆர்.