MLC Kavitha bail : சொதப்பிய ப்ளான்.. சோகத்தில் BRS கவிதா நெருக்கும் ED
மணீஷ் சிசோடியாவை போல தனக்கும் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த பிஆர் எஸ் கவிதாவின் ஜாமீன் வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்காமல் சிபிஐ அமலாக்கத்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ஏமாற்றம் அடைந்தார் கவிதா.
டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கொண்டு வந்த புதிய மதுப்பான கொள்கையில் முறைக்கேடு நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறையால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி அரசின் மதுப்பான கொள்கையில் ஆதாயம் நிறுவனத்துக்கும் கவிதாவுக்கும் தொடர்பிருப்பதாக கூறி கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி கவிதா தரப்பில் பலமுறை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுக்கள் நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி கவிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 17 மாதமாக சிறையில் இருந்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதே போல தனக்கும் ஜாமீன் கிடைக்கும் என்று கவிதா தரப்பில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கவிதாவின் ஜாமீன் மனு மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விளக்கமளிக்க வேண்டும் எனவும் அந்த விளக்கத்தை வைத்து தான் ஜாமீன் வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மணீஷ் சிசோடியாவை போல தனக்கும் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த கவிதாவுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்தது.