அமைச்சர்கள் திடீர் ஆய்வு பினாயில் ஊற்றி வரவேற்பு மருத்துவமனையில் வேடிக்கை | Madurai Goverment Hospital
ஆய்வுக்கு அமைச்சர்கள் வரும்போது தரையில் ஒரு மண் கூட இருக்க கூடாது என கூறி தரையை துடைத்தெடுத்த ஊழியர்கள் அமைச்சர்கள் வரவர பினாயிலை வழிநெடுக்க ஊற்றி சென்றது வேடிக்கையாக இருந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 50 லட்சம் மதிப்பில் டெக்ஸா ஸ்கேன் கருவி தொடங்கி வைப்பதற்காக அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் மூர்த்தி , பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.ட் அப்போது மருத்துவமனையில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் அரசு மருத்துவமனைக்கு வருகை தருகிறார் என்றவுடன் காலை முதலாகவே அரசு மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்கள் சுறுசுறுப்பாக சுற்றிசுற்றி மருத்துவமனை வளாகம் முழுவதிலும் தூய்மைப்படுத்திக் கொண்டே இருந்தனர்.குறிப்பாக அமைச்சர் வரும் ரோட்டில் ஒரு மண் கூட இருக்கக் கூடாது என்பதற்காக சாலையை துடைப்பத்தை வைத்து கூட்டிக் கொண்டே இருந்தனர்.
இதே போன்று அமைச்சர் மருத்துவமனையில் நடந்துவந்த போது அரசு மருத்துவமனை சுவர்களிலும் தரைகளிலும் பாட்டிலில் நிரப்பபட்ட பினாயிலை தெளித்துக் கொண்டே பாதுகாவலர்களும் பணியாளர்களும் முன்னே வந்து கொண்டே இருந்தனர். பினாயில் தெளிக்க தெளிக்க பின்னால் அமைச்சர்கள் நடந்து வந்தே கொண்டே இருந்தனர்
இதனை பார்த்து பொதுமக்கள் இது என்ன சிவப்பு கம்பள வரவேற்பு போல வித்தியாசமாக பினாயில் வரவேற்பா? என சிரித்தபடி வேடிக்கை பார்த்தனர்.





















